கியார்கு ஆத்தோ கெர்மனோவிச் சுத்ரூவ

கியார்கு ஆத்தோ கெர்மனோவிச் சுத்ரூவ (Georg Otto Hermann Struve) (உருசியம்: Георг Германович Струве; 29 திசம்பர் 1886 – 10 ஜூன் 1933)[1] ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் எர்மன் சுத்ரூவ அவர்களின் மகனாவார்.

கியார்கு 1886 இல் முந்தைய உருசிய பேர்ரசைச் சார்ந்த உரோமனோவ் அரசு குடும்பத்தில் சாரோசுகோயெ செலோவில் பிறந்துள்ளார்.இந்த இடம் புனித பீட்டர்சுபர்கு நடுப்பகுதியில் இருந்து 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவரது குடும்பம் 1895 இல் கோனிக்சுபர்குக்கு குடிபெயர்ந்துள்ளது. அங்குள்ல பள்ளியில் படித்த பிறகு இவர் 1905 முதல் 1910 வரை பெர்லின் பல்கலைக்கழகத்திலும் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். இவர் 1910 முனைவர் பட்டம் பெற்றதும் அங்கு 1914 வரை 1போன் வான்காணகத்திலும் அம்பர்கு-பெர்கேடோர்ஃப் வான்காணகத்திலும் பணிபுரிந்துள்ளார். பிரகு வில்கெல்ம்சாவெனில் இருந்த நாவாயியல் வான்காணகத்தில் 1914 முதல் 1919 வரை பணிபுரிந்தார். பின்னர், இவர் தன் தந்தையார் எர்மன் சுத்ரூவ நிறுவிய பெர்லின் பாபேல்சுபர்கு வான்காணகத்தில் 1919இல் சேர்ந்தார். இங்கே இவர் வான்கோள இயக்கவியலைப் பயின்று தன் தந்தையாருடன் பணிபுரியலானார்.அப்போது காரிக்கோள், யுரேனசு (வருணன்) ஆகியவற்றின் இயக்கங்களை ஆய்வு செய்தார். காரிக்கோளின் நிலாக்களை நோக்கிட இவர் இலிக் வான்காணகத்துக்குச் சென்றார். அங்கே இவர் தன் ஒன்றுவிட்ட உறவினர் ஆட்டோ சுத்ரூவவைச் சந்தித்தார். இதே நோக்கத்துக்காக இவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒன்றிய வான்காணகத்துக்கு 1926 இல் சென்றார். அங்கே இவர் தரமுள்ள காரி நிலாக்களின் உருப்படிமங்களைப் படம்பிடித்தார்.[2] இவர் 1930 வாக்கில் ஈராசு பரப்புரையில் கலந்துகொண்டு குறுங்கோள் 433 ஈராசு நோக்கிடுகளைப் பயன்படுத்தி, சூரிய இடமாறு தோற்றப் பிழையைக் கண்டுபிடித்தார். சுத்ரூவ அமெரிக்க வான்காணகங்களையும் பயன்கொண்டுள்ளார். ய்ரெக்கேசு வான்காணகத்தில் தனொன்றுவிட்ட உரனிர் ஆட்டொவை மீண்டும் சந்தித்து தன் தாத்தா ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ அவர்களின் சீட்டா காங்கிரீ எனும் சிக்கலான பன்மை விண்மீன் அமைப்பின் நோக்கிடுகளை மீள பகுத்தாய்ந்துள்ளார்.[3][4]

இவர் பிரசியத் தளபதியின் மகளாகிய மேரி வான் மோக்கை மணந்தார். இவர்களுக்கு இருமகன்கள் உண்டு. இவரில் வில்பிரீடு செருமனியிலுள்ள வில்கெல்ம்சாவெனில் 1914 இல் பிறந்தார்.செருமனியிலுள்ல கார்ல்சுருகேவில் 1992 இல் இறந்தார்.[5] மற்றொரு மகன் இரீன்கார்த் ஆவார். வில்பிரீடு வானியலிலும் ஒலியியலிலும் ஈடுபட்டார். இரீன்கார்த் இரண்டாம் உலகப் போரில் 1943 இல் இறந்தார்.[2] On May 28, 1933, Georg Struve was taken to the hospital with an acute pneumonia and died on June 10.[1][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Wilhelm Brüggenthies, Wolfgang R. Dick (2005). Biographischer Index der Astronomie. Verlag Harri Deutsch. p. 427. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8171-1769-8.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 V. K. Abalkin et al. Struve dynasty பரணிடப்பட்டது மே 14, 2011 at the வந்தவழி இயந்திரம் (in Russian), St. Petersburg University
  3. John Lankford (1997). History of astronomy: an encyclopedia. Taylor & Francis. p. 500. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-0322-X.
  4. 4.0 4.1 Otto Struve. "Georg Struve, 1886-1933". Publications of the Astronomical Society of the Pacific 45 (268): 289. doi:10.1086/124372. Bibcode: 1933PASP...45..289S. 
  5. Artemenko, T. G.; Balyshev, M. A.; Vavilova, I. B. (2009). "The struve dynasty in the history of astronomy in Ukraine". Kinematics and Physics of Celestial Bodies 25 (3): 153. doi:10.3103/S0884591309030040. Bibcode: 2009KPCB...25..153A.