கியுனைஃப் (Cunife) என்பது தாமிரம், நிக்கல், இரும்பு மற்றும் சில நிகழ்வுகளில் கோபால்ட் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் கலப்புலோகமாகும். சிலவகை கண்ணாடிகளுக்கு இணையான நேரியல் குணக விரிவு மதிப்பைக் கொண்டுள்ளதால் இதை விளக்குகள், வால்வுகள் முதலியவற்றில் பயன்படுத்துகிறார்க்ள். பெர்நிக்கோ கலப்புலோகமும் இதே பண்புகளைக் கொண்டுள்ளது. இதுவொரு காந்தக் கலப்புலோகமென்பதால் காந்தங்கள் தயாரிப்பில் பயனாகிறது. கியுனைஃப் கலப்புலோகம் பலநூறு ஒயர்சிடெட் அளவு காந்த நீக்குத்திறன் மதிப்பைப் பெற்றுள்ளது. மற்ற காந்த நீக்குத்திறன் கொண்ட பொருட்கள் கடினமாகவும் நொறுங்கும் தன்மையுடனும் காணப்படுகின்றன. எனவே அவற்றை வடிவமாக்க வார்ப்பிட வேண்டியுள்ளது. கியுனைஃப்பை மெல்லிய கம்பியாக இழுக்கலாம். 5 தோவ் அளவுள்ள மிக மெல்லிய கம்பிகளாக கியுனிஃபை இழுக்கமுடியும் [1].