கிரடா | |
---|---|
கிடாரைட்டு மன்னன் | |
பின்பகுதி: சென்குத்தாக பல பெயர்கள் இடம் பெற்றுள்ளன மத்தியில்' கிரடா என்ற பெயர் ( monogram ()[1] இடது மத்தியில் 'க-ப-னா' என்ற பொருள் தெரியாத ஒரு வார்த்தை இடம்பெற்றுள்ளது.[2][3] மற்றொரு மக்கம் அர்தோக்சோ தேவி அமர்ந்திருக்கும் தோற்றம். | |
கிடாரைட்டுகள் | |
ஆட்சிக்காலம் | 335-345 பொ.ச. |
முன்னையவர் | கிபுனாடா |
பின்னையவர் | பெரோஸ் |
கிராடா (Kirada, ஆட்சி பொ.ச. 335-345),[4] வடமேற்கு இந்தியாவின் காந்தாரப் பகுதியில் கிடாரைட்டு வம்சத்தின் முதல் அறியப்பட்ட ஆட்சியாளராக நவீன வரலாற்று அறிஞர்களால் கருதப்படுகிறார்.[5] ஒருவேளை இதே காலத்தில் யசதன் என்ற மற்றொரு கிடாரைட்டு ஆட்சியாளர் இருந்திருக்கலாம்.[6]
பொ.ச. 340-345 காலகட்டத்தில், இந்தியாவில் மத்திய மற்றும் மேற்கு பஞ்சாப் பகுதியில், குசானப் பேரரசின் முடிவிலும், கிடாரைட்டுகளின் ஆட்சியின் தொடக்கத்திலும் ஏராளமான நாணயங்களில் 'கிரடா' என்ற பெயர் காணப்படுகிறது.[7]
காந்தாரப் பகுதியில் கிடைத்துள்ள கிரடாவின் நாணயங்களின் வலதுபுறத்தில் 'கா-தா-ரா'[8] என செங்குத்தாக அச்சிடப்பட்டுள்ளது. இது சமுத்திரகுப்தர் கையொப்பமிடப்பட்ட சில நாணயங்கள் அல்லது யசதன், பெரோஸ் மற்றும் முதலாம் கிடாரன் போன்ற பிற ஆரம்பகால கிடாரைடு ஆட்சியாளர்களின் நாணயங்கள் போன்றவை. சமுத்திரகுப்தர் என்ற பெயரின் தோற்றம் குப்தப் பேரரசுடன் தொடர்புடைய ஒருவித மேலாதிக்கத்தை பரிந்துரைக்கலாம்.[4]
கிராடனின் நாணயங்கள் காந்தாரத்தில் சமுத்திரகுப்தரின் பெயரில் இருந்த நாணயங்களைப் பின்பற்றி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவருக்குப் பிறகு கிடாரைட்டு ஆட்சியாளராக பெரோஸ் மற்றும் பின்னர் பிரபலமான முதலாம் கிடாரன் இருந்ததாக கருதப்படுகிறது. மொத்தத்தில் கடைசி குசான ஆட்சியாளர் கிபுனாடாவின் ஆட்சிக்குப் பிறகு அவை முதல் நாணய வெளியீடுகளை உருவாக்குகின்றன. [2]
கிரடா, சுமார் பொ.ச.340-345- இல் ஆண்ட கடைசி குசான-சாசானிய ஆட்சியாளரான முதலாம் வராக்ரன் குசான்ஷாவின் பெயருடன் கிடாரைட்டுகளின் எழுச்சிக்கு முன் பயன்பாட்டில் இருந்த நந்திபாதத்தை ( காளையின் குளம்புகள் ) மாற்றி கிடாரைட்டு முத்திரையை இணைத்து பல்குவில் வெளியிட்டார்.