கிரண் சேத் | |
---|---|
2014இல் கிரண் சேத் | |
பிறப்பு | 27 ஏப்ரல் 1949 |
தேசியம் | இந்தியா |
கல்வி | முனைவர் (1974) கொலம்பியா பல்கலைக்கழகம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர், கொலம்பியா பல்கலைக்கழகம் |
பணி | ஓய்வு பெற்ற பேராசிரியர் |
பணியகம் | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி |
அறியப்படுவது | இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் |
கிரண் சேத் (Kiran Seth; பிறப்பு 1949) ஒரு இந்திய கல்வியாளர் ஆவார். தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை, இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் பிற அம்சங்களை ஊக்குவிக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தை (1977) இன் நிறுவனராக இவர் மிகவும் அறியப்படுகிறார்.[1][2]
2009 ஆம் ஆண்டு, கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[3]
1951 இல் நிறுவப்பட்ட கரக்பூர், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணிதவியலாளரும் முதல் பேராசிரியருமான போஜ்ராஜ் சேத் என்பவருக்கும் பகவதி என்பவருக்கும் மகனாக 27 ஏப்ரல் 1949 இல் பிறந்தார்.
சேத் 1974 இல் நியூ செர்சியில் உள்ள பெல் ஆய்வகங்களில் தொழில்நுட்ப ஊழியர்களில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்கினார். 1976 இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர் புது தில்லி இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில்உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இங்கு இவர் பணி புர்யும்போதுதான் இவர் 1977 இல் இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தை நிறுவினார் [4] [5]
2012 முதல் 2014 வரை புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார் [6]
இன்று இந்த இயக்கம் தொடர் இசை நிகழ்ச்சிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய மாநாடுகள், தேசியத் தீவிரப் பள்ளி, பூங்காவில் இசை, உதவித் தொகைத் திட்டம், பாரம்பரிய நடைகள், சிறந்த சிந்தனையாளர்களின் பேச்சுக்கள், யோகக் கலை முகாம்கள், பாரம்பரிய திரைப்படங்கள் திரையிடல் முதலியனவற்ற நடத்துகின்றன.[7][8][9][10]