கிரண் ரிஜிஜூ | |
---|---|
![]() | |
புவி அறிவியல் அமைச்சர் | |
பதவியில் 18 மே 2023 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 29, 1971[1] நப்ரா, மேற்கு காமெங் மாவட்டம், அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஜோரம் ரீனா ரிஜிஜூ |
வாழிடம் | 9, கிருட்டிண மேனன் மார்க், புது தில்லி – 110011 |
கல்வி | பி. ஏ, எல். எல்.பி[2] |
முன்னாள் மாணவர் | ஹன்ஸ்ராஜ் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | sites |
கிரண் ரிஜிஜூ (Kiren Rijiju, பிறப்பு: 19 நவம்பர் 1971) என்பவர் அருணாச்சலப் பிரதேச மாநில வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். சட்ட அமைச்சகராக இருந்த இவர் 18 மே 2023 அன்று புவி அறிவியல் அமைச்சராக மாற்றப்பட்டார்.[3]
இவர் நவம்பர் 19, 1971 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலத்தின், மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள நப்ரா அருகிலுள்ள நாகுவில் பிறந்தார். இவரது தந்தை சிறீ ரிஞ்சின் கரு மற்றும் தாயார் சிரை ரிஜிஜூ ஆகியோர் ஆவர். இவர் தில்லி பல்கலைக்கழகத்தின், ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பையும், மற்றும் கேம்பஸ் சட்ட மையத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார்.[4]
கிரண் ரிஜிஜூ 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] பின்னர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சகத்தின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.[6][7][8] பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். பின்னர் மே 2019 ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சராகப் (தனிப்பொறுப்பு) பதவி வகிக்கின்றார்.[9][10][11]