கிராசுபிடோசெபாலசு | |
---|---|
மூங்கில் குழி விரியன் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | ஊர்வன
|
வரிசை: | |
குடும்பம்: | வைப்பெரிடே
|
பேரினம்: | கிராசுபிடோசெபாலசு குக்ல் & வான் ஹாசெல்ட், 1822
|
கிராசுபிடோசெபாலசு (Craspedocephalus) என்பது இந்தியத் துணைக்கண்டம் முதல் தென்கிழக்கு ஆசியா வரை ஆசியாவில் காணப்படும் நச்சுப் பாம்பு பேரினமாகும். தற்போது 14 சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கிராசுபிடோசெபாலசு பேரினத்தில் உள்ள பெரும்பாலான சிற்றினங்கள் ஒப்பீட்டளவில் சிறியவை. முதன்மையாக மரங்களில் வாழ்பவை. மெல்லிய உடல்கள் மற்றும் மரக்கிளைகளைப் பற்றும் தன்மையுடைய வாலினைக் கொண்டவை. பெரும்பாலான கிராசுபிடோசெபாலசு பேரினங்கள் பச்சை நிறத்தில் உள்ளன. ஆனால் சில சிற்றினங்கள் மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு, சிவப்பு அல்லது தங்க நிறத்தில் காணப்படும்.
கிராசுபிடோசெபாலசு பேரினங்களின் உணவில் பல்லி, நீர்நில வாழ்வன, பறவை, கொறிணி மற்றும் பிற சிறிய பாலூட்டி உட்பட பல்வேறு விலங்குகள் அடங்கும்.
படம் | சிற்றினம் | வகைப்பாட்டியலாளர் | பொதுவானப் பெயர்[2] | புவியியல் வரம்பு |
---|---|---|---|---|
கி. அனமலென்சிசு | (குந்தர், 1864) | மலபாரியன் குழி வைப்பர் | இந்தியா | |
கி. அண்டலாசென்சிசு | டேவிட், வோகல், விஜய்குமார் & விடல், 2006 | சுமத்ரா பனை குழி விரியன் | இந்தோனேசியா: சுமத்ரா . | |
கி. போர்னியன்சிசு | டபிள்யூ. பீட்டர்சு, 1872 | போர்னியோ குழி விரியன் | இந்தோனேசியா: போர்னியோ . | |
கி. புரோங்கெர்சுமை | ஹோஜ், 1969 | புரோங்கர்சுமாவின் குழி விரியன் | இந்தோனேசியா: சிமலூர் தீவு. | |
கி. கிராமியசு மாதிரி இனம் |
ஷா, 1802 | மூங்கில் விரியன் | தென்னிந்தியா. | |
கி. மேக்ரோலெபிசு | பெடோம், 1862 | பெரிய அளவிலான குழி விரியன் | தென்னிந்திய மலைகள். | |
கி. மலபாரிகசு | ஜெர்டன், 1854 | மலபாரியன் குழி விரியன் | தெற்கு மற்றும் மேற்கு இந்தியா 600-2,000 மீ உயரத்தில். | |
கி. ஆக்சிடெண்டலிசு | போப் & போப், 1933 | இந்தியா | ||
கி. பெல்டோபெலர் | மல்லிக், ஸ்ரீகாந்தன், கணேஷ், விஜயகுமார், கேம்ப்பெல், மல்ஹோத்ரா & சங்கர், 2021. | இந்தியா | ||
சி. புனிசியஸ் | போயி, 1827 | சாம்பல் குழி விரியன், தட்டை மூக்கு குழி விரியன் | தெற்கு தாய்லாந்து, மேற்கு மற்றும் கிழக்கு மலேசியா (சபா மற்றும் சரவாக்) மற்றும் இந்தோனேசியா (போர்னியோ, சுமத்திரா, சைபரட்டின் மெண்டவாய் தீவுகள் மற்றும் வடக்கு பகை, சிமலூர் மற்றும் சாவகம் தீவு | |
கி. இசுட்ரிகேடசு | கிரே, 1842 | குதிரைவாலி குழி விரியன் | தென்னிந்திய மலைகள் | |
கி. திருவாங்கொரிகசு | மல்லிக், ஸ்ரீகாந்தன், கணேஷ், விஜயகுமார், கேம்ப்பெல், மல்ஹோத்ரா & சங்கர், 2021 | இந்தியா | ||
கி. திரிகோனோசெபாலசு | டோன்டோர்ப், 1798 | இலங்கை குழு விரியன், இலங்கை பச்சை குழி விரியன் | இலங்கை முழுவதும், சுமார் 1,800 மீ. உயரம் வரை | |
கி. விரோட்டி | ட்ருட்னாவ், 1981 | வைரோட்டின் குழி விரியன் | தாய்லாந்து, மேற்கு மலேசியா. |
*) பரிந்துரைக்கப்பட்ட துணையினங்கள் சேர்க்கப்படவில்லை.