இந்த கட்டுரை சான்றுகளின் பட்டியலை அல்லது வெளி இணைப்புகளைக் கொண்டுள்ளது, ஆனாலும் இதன் மூலங்கள் தெளிவாக இல்லை, ஏனெனில் வரிகளுள் மேற்கோள்கள் சுட்டப்படவில்லை. (Dec 2014) |
இந்த கட்டுரை கொண்டுள்ள உள்ளடக்கம் விளம்பரத்தை போல் காணப்படுகிறது.. (Dec 2014) |
கிராண்டு ஹயாத் மும்பை Grand Hyatt Mumbai | |
---|---|
விடுதி சங்கிலி | ஹயாத் |
பொதுவான தகவல்கள் | |
இடம் | இந்தியா |
முகவரி | மேற்கு விரைவுவழிச்சாலை, சான்டாகுரூஸ் (கிழக்கு), மும்பை - 400055, இந்தியா |
திறப்பு | 2004 |
மேலாண்மை | ஹயாத் ஓட்டல்ஸ் கார்ப்பரேசன் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 6 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | லோஹன் அசோசியேட்ஸ், சிக்காகோ |
பிற தகவல்கள் | |
அறைகள் எண்ணிக்கை | 508 |
தொகுப்புகளின் எண்ணிக்கை | 39 |
வலைதளம் | |
mumbai.grand.hyatt.com |
கிராண்ட் ஹயாத் மும்பை ஓட்டல், மும்பையின் சாண்டாகுரூஸ் பகுதியில் உள்ள மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு, அருகே அமைந்துள்ள மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும்.[1] இதன் வடிவமைப்பு சிக்காகோவின் லோஹன் அசோஸியேட்ஸால் செய்யப்பட்டது. இது 10 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. கிராண்ட் ஹயாத் மும்பை ஹோட்டல் 2004ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு 547 விருந்தினர் அறைகளும், 111 சேவை அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உள்ளன.
இது உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 3.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது மாவட்டத்தின் வணிக ரீதியான பகுதியில் பாந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ்க்கு அருகில் அமைந்துள்ளது.[2] இதனருகே மாவட்டத்தின் பல பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. இதன் விருந்திற்கான பகுதி மட்டும் 30,000 சதுர அடியில் அமைந்துள்ளது. 790 சதுர மீட்டர் அளவிலான சந்திப்பு, மாநாடு அளவிலான பெரிய இடம், அத்துடன் ஏழு பெரிய சந்திப்பு அறைகள், மாதிரி முற்செயல்பாட்டு அறைகள் உள்ளிட்டவையும் உள்ளன. அத்துடன் உணவுவகைகளில் பல நாடுகளின் வகைகள் பரிமாறப்படுகின்றன. அந்தந்த வகுப்பு அறைகளுக்குத் தகுந்தாற்போல் வசதிகளும், பொது வசதிகளும் அளிக்கப்படுகின்றன.[3]
சுமார் 30 முதல் 1300 வரையிலான விருந்தினர்கள் தங்குமளவிற்கு இந்த ஹோட்டல் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு தங்குபவர்களின் பொருளாதாரக் கட்டணங்களைப் பொருத்து அறை வசதிகள் மாறுபடுகின்றன. இருப்பினும் மேற்கூறிய ஹோட்டல் வசதிகளுடன் சில முக்கிய வசதிகளும் இங்கு செய்து தரப்படுகின்றன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.[5][6] ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் இங்குள்ளன.
{{cite web}}
: Check date values in: |date=
(help)