கிரி மரப்பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. கிரி
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு கிரி மிசா மற்றும் பலர் 2014 |
கிரி மரப்பல்லி (Giri's day gecko)(நெமாசுபிசு) என்பது 2014-ல் விவரிக்கப்பட்ட நெமாசுபிசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு மரப்பல்லி சிற்றினம் ஆகும்.[1] இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள சாத்தாரா மாவட்டத்தில் உள்ள காசு பீடபூமியின் காடுகளில் காணப்படும் இந்த சிற்றினம், பெங்களூரின் தேசிய உயிரியல் அறிவியல் மையம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. மரப்பல்லி தன் வாழிட எல்லைக்குள் உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் பாறைகள் மற்றும் மரங்களின் அடியில் வாழ்கிறது.
இது பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் ஆய்வாளர் வரத் கிரியின் பெயரால் அழைக்கப்படுகிறது.[2]
பல்லியின் மஞ்சள் நிற உடலில் மஞ்சள் புள்ளிகள் காணப்படுகின்றன. மேலும் அதன் உடலில் கருமையான அடையாளங்களும் கழுத்தில் ஒரு கரும் புள்ளியும் உள்ளது. இது பொதுவாக இரண்டு அங்குலத்தை விட சிறியது. [3]