கிரிக் (P054) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Gerik (P054) Federal Constituency in Perak | |
மாவட்டம் | உலு பேராக் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 47,565 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | கிரிக் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | கிரிக், லெங்கோங், குரோ, பெத்தோங் |
பரப்பளவு | 4,521 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | பைத்துல் உசிர் அயோப் (Fathul Huzir Ayob) |
மக்கள் தொகை | 56,810 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கிரிக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gerik; ஆங்கிலம்: Gerik Federal Constituency; சீனம்: 宜力国会议席) என்பது மலேசியா, பேராக், உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P054) ஆகும்.[6]
கிரிக் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கிரிக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கிரிக் நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், பட்டர்வொர்த் மாநகரில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மலேசியாவை கிழக்கு மேற்காக இணைக்கும் கிழக்கு-மேற்கு விரைவுசாலையின் நடு மையத்தில் அமைந்து இருப்பதால், இந்த நகரை ஓய்வு நகரம் என்றும் அழைக்கிறார்கள். மலேசிய தாய்லாந்து எல்லையில் இருந்து, மிக அருகில், 30 கி.மீ. தொலைவில் தான் இருக்கிறது.[7]
1880-களில் கிரிக் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. 1870-இல், தாய்லாந்தில் இருக்கும் பட்டாணி எனும் இடத்தில் இருந்து சிலர் இங்கு வந்து குடியேறினார்கள். அந்தப் பகுதியின் காடுகளை அழித்து வீடுகளைக் கட்டிக் கொண்டனர். இந்த இடத்தை கெரிக் என்றும் அழைப்பார்கள். மலேசிய வாழ் தமிழர்கள் கிரிக் என்று அழைக்கிறார்கள்.
கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த நகரம் நவீன மயமாகி வருகிறது. பல புதிய சாலைகள் இந்த நகரை அலங்கரிக்கின்றன. மலேசிய கிழக்கு-மேற்கு விரைவுசாலை அமைக்கப் பட்ட பின்னர், இந்த நகரம் வேகமான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது.
பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் உலு பேராக் மக்களவைத் தொகுதியில் இருந்து கிரிக் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P044 | 1974–1978 | சும்சுதீன் டின் (Shamsuddin Din) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | தாஜோல் ரோசுலி (Tajol Rosli Mohd Ghazali) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P049 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P052 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | கம்சியா இயோப் (Khamsiyah Yeop) | ||
11-ஆவது மக்களவை | P054 | 2004–2008 | வான் அசீம் வான் தே (Wan Hashim Wan Teh) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | தான் லியாம் கோ (Tan Lian Hoe) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | அசுபுல்லா ஒசுமான் (Hasbullah Osman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
14-ஆவது மக்களவை | 2018–2020 | |||
2020–2022 | காலி[N 1] | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | பைத்துல் உசிர் அயோப் (Fathul Huzir Ayob) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
47,565 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
35,360 | 72.77% | ▼ - 5.31% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
34,612 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
78 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
670 | ||
பெரும்பான்மை (Majority) |
1,377 | 3.98% | ▼ - 16.26 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [8] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
பைத்துல் உசிர் அயோப் (Fathul Huzir Ayob) |
பெரிக்காத்தான் | 34,612 | 15,105 | 43.64% | + 43.64% | |
அச்ராப் வாஜிடி துசுக்கி (Asyraf Wajdi Dusuki) |
பாரிசான் | - | 3,728 | 39.66% | - 16.40 % ▼ | |
அகமத் தர்மிசி முகமது ஜாம் (Ahmad Tarmizi Mohd Jam) |
பாக்காத்தான் | - | 5,779 | 16.70% | - 6.56% ▼ |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)