கிரிஜகுமார் மாத்தூர் गिरिजाकुमार माथुर | |
---|---|
பிறப்பு | அசோக் நகர், குவாலியர் மாநிலம், பிரித்தானிய இந்தியா | 22 ஆகத்து 1919
இறப்பு | 10 சனவரி 1994 புது தில்லி, இந்தியா | (அகவை 75)
தொழில் | எழுத்தாளர், கவிஞர் |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
பிள்ளைகள் | பவன் மாத்தூர், அமிதாப் மாத்தூர், அசோக் மாத்தூர் |
கிரிஜகுமார் மாத்தூர் (ஆங்கிலம்: Girija Kumar Mathur; இந்தி: गिरिजाकुमार माथुर) (பிறப்பு: 22 ஆகஸ்ட் 1919 - இறப்பு; 10 ஜனவரி 1994) என்பவர் இந்தி மொழியின் குறிப்பிடத்தக்க இந்திய எழுத்தாளர் ஆவார். பிரபலமான ஆங்கில பாடலான " வி ஷால் ஓவர்கம்" என்ற பாடலை இந்தியில் (हम होगें कामयाब) மொழிபெயர்த்ததற்காக இவர் அறியப்படுகின்றார்.[1] இவரது தந்தை தேவிச்சரன் மாத்தூர் என்பவர் உள்ளூர் பள்ளியில் ஆசிரியராக கடமை புரிந்தார். இலக்கியத்தின் மீதும் இசையின் மீதும் மிகுந்த நாட்டமுடையவர். கிரிஜகுமாரின் தாயாரின் பெயர் லட்சுமிதேவி. கிரிஜகுமார் மாத்தூர் தனது படைப்புக்கள் மூலம் இந்தி இலக்கியத்தை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக இந்தியில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
கிரிஜகுமார் மாத்தூர் 1919 ஆம் ஆண்டு ஆகத்து 22 அன்று பிரித்தானிய இந்தியாவில் அசோக்நகரில் பிறந்தார். வரலாறு, புவியியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை வீட்டில் அவரது தந்தையிடம் கற்றுக் கொண்டார். ஜான்சியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பிறகு, லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை மற்றும் சட்டக்கல்வி பயின்றார். பின்னர் அகில இந்திய வானொலியிலும் பின்னர் தூர்தர்ஷனிலும் பணியாற்றத் தொடங்கினார்.
மாத்தூர் சட்டக் கல்வியில் பட்டம் பெற்றதும் ஆரம்பத்தில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் அகில இந்திய வானொலியின் தில்லி அலுவலகத்தில் இணைந்தார். அங்கு சில வருடங்கள் பணியாற்றிய பின் இந்தியாவின் ஒரே தொலைக்காட்சி ஒளிபரப்பு அமைப்பான தூர்தர்ஷனில் பணிப்புரியத் தொடங்கினார்.[2]
1941 ஆம் ஆண்டில் மாத்தூர் தனது முதல் கவிதைத் தொகுப்பான மஞ்சீரை வெளியிட்டார்.[2]
தூர்தர்ஷனில் பணியாற்றும் போது பிரபலமான பாடலான "நாங்கள் வெல்வோம்" என்ற பாடலை இந்தியில் மொழிபெயர்த்தார். இந்தப் பாடல் தூர்தர்ஷன் இசைக்குழுவின் பெண் பாடகரால் பாடப்பட்டதுடன், இந்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி சதீஷ் பாட்டியா இசையமைத்தார்.[3] பாடலின் பதிப்பை பின்னர் டி.வி.எஸ் சரேகாமா வெளியிட்டார். [4]1970 ஆம் ஆண்டில் இந்தி மொழிபெயர்ப்பு சமூக மேம்பாட்டுப் பாடலாக வெளியிடப்பட்டது. மேலும் இந்தப் பாடல் 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் தூர்தர்ஷனால் ஒளிபரப்பப்பட்டது. அக் காலத்தில் இந்தியாவின் ஒரே தொலைக்காட்சி நிலையமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் திகழ்ந்தது. இந்த பாடல் குறிப்பாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் இசைக்கப்பட்டது.[5]
மாத்தூர் 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை துணை இயக்குநராக தூர்தர்ஷனில் பணியாற்றினார்.[2]
கிரிஜகுமார் மாத்தூர் 1934 ஆம் ஆண்டில் பிரஜ் மொழியில் இலக்கியத்தில் தனது பணியைத் தொடங்கினார். மகன்லால் சதுர்வேதி மற்றும் பால்கிருஷ்ணா சர்மா 'நவீன்' போன்ற எழுத்தாளர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அவர், 1941 இல் தனது முதல் படைப்பான 'மஞ்சீர்' ஐ வெளியிட்டார். தனது படைப்புகளினூடாக இந்தி இலக்கியத்திற்கும், சமூகம் வழியாக தார்மீக செய்திகளை பரப்பவும் பங்களிப்புச் செய்தார். அவரது படைப்புகளில் நாஷ் அவுர் நிர்மன், துப் கே தன், ஷீலாபங்க் சாம்கிலே, பித்ரி நாடி கி யாத்ரா, ஜான்ம் கைட், நய் கவிதா: சீமே அவுர் சம்பவ்னே என்பன குறிப்பிடத்தக்கவைகளாகும். 1943 ஆம் ஆண்டில் அகியாவால் திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட தார் சப்தக் என்ற கவிதைத் தொகுப்பை படைத்த ஏழு புகழ்பெற்ற இந்தி கவிஞர்களில் கிரிஜகுமார் மாத்தூரும் ஒருவராவார்.[6] இவர், பல நாடகங்கள், பாடல்கள் மற்றும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1991 ஆம் ஆண்டில், "மெயின் வாக்ட் கே ஹன் சாம்னே" மற்றும் அதே ஆண்டில் வியாஸ் சம்மன் ஆகிய அவரது பாடல் திரட்டுகளுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. [7]"வி ஷால் ஓவர்சாம்" என்ற பிரபலமான ஆங்கில பாடலை இந்தியில் மொழிபெயர்த்ததற்காக அறியப்படுகின்றார்.[2]
மாத்தூர் தனது வாழ்க்கை பயணத்தை முஜே அவு அபி கெஹ்னா ஹை என்ற தனது சுயசரிதையில் விவரித்தார்.[2]
கிரிஜகுமார் மாத்தூர் 1994 ஆம் ஆண்டு சனவரி 10 அன்று தனது 75 ஆவது வயதில் புதுதில்லியில் காலமானார்.[8]
{{cite web}}
: |first4=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)