கிரினோவைட்டு Krinovite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | NaMg2CrSi3O10 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 367.85 கிராம் |
நிறம் | மரகதப் பச்சை |
பிளப்பு | இல்லை |
மோவின் அளவுகோல் வலிமை | 5½ - 7 |
மிளிர்வு | சிறிதளவு விடாபிடியான பளபளப்பு |
கீற்றுவண்ணம் | பச்சை கலந்த வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும் முதல் கடத்தாது வரை |
அடர்த்தி | 3.38 |
கிரினோவைட்டு (Krinovite) என்பது NaMg2CrSi3O10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மரகதப் பச்சை நிறத்தில் முச்சரிவச்சுப் படிகமாகக் காணப்படும் இது விண்கல்லைச் சேர்ந்த கனிமமாகும். ஏனிக்மாடைட்டு குழுவைச் சேர்ந்த குரோமியம், மெக்னீசியம், ஆக்சிசன், சிலிக்கான் மற்றும் சோடியம் போன்ற தனிமங்கள் இக்கனிமத்தில் கலந்துள்ளன.[1][2] அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள னியன் டையப்லோ நகரத்திலும், டெக்சாசு மாநிலத்திலுள்ள விச்சிட்டா மாகாணத்திலும், மேற்கு ஆத்திரேலிய நகரமான யுண்டெச்சின் நகரத்திலும் உள்ள விண்கற்களின் கிராபைட்டு முடிச்சுகளில் கிரினோவைட்டு கண்டறியப்பட்டது.[3] விண்கற்கள் பற்றிய உருசிய ஆய்வாளரான இவ்கெனி லியோனிடோவிச்சு கிரினோவ் நினைவாக கனிமத்திற்கு கிரினோவைட்டு எனப் பெயரிடப்பட்டது.[4] கிரினோவைட்டு கனிமம் சொரோசிலிகேட்டு துணைப்பிரிவில் இடம்பெற்றுள்ள ஒரு டெக்கா ஆக்சோடிரைசிலிக்கேட்டு ஆகும்.
பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் கிரினோவைட்டு கனிமத்தை Kvi[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.