கிருஷ்ண குமார் பிர்லா நிறுவனம் (K. K. Birla Foundation) 1991 ஆம் ஆண்டு தில்லியில் கிருஷ்ண குமார் பிர்லாவால் நிறுவப்பட்டது. இது கே.கே. பிர்லா நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இந்நிறுவனத்தின் முதன்மை நோக்கம் இலக்கியம் (குறிப்பாக இந்தி இலக்கியம்), கலை, கல்வி மற்றும் சமூக பணிகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது ஆகும்.
இந்நிறுவனம் பல்வேறு துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாளர்களை ஊக்குவிக்க பல்வேறு விருதுகளை வருடந்தோறும் வழங்கி வருகிறது. கீழ்கண்ட விருதுகள் கே.கே,பிர்லா நிறுவனத்தால் வழங்கப்பட்டுவருகிறது,
இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் விருதாகும். இதன் மதிப்பு ஐந்து லட்சம் இந்திய ரூபாய் ஆகும்.
இந்தி மொழியில் எழுதப்படும் சிறந்த கவிதை அல்லது உரைநடைக்காக வழங்கப்படும் விருது ஆகும். இதன் மதிப்பு இரண்டரை லட்சம் இந்திய ரூபாய் ஆகும்.
இந்தி மற்றும் இராச்சசுத்தானி மொழியில் எழுதப்படும் சிறந்த கவிதை அல்லது உரைநடைக்காக வழங்கப்படும் விருது ஆகும். இராச்சசுத்தானை சார்ந்த எழுத்தாளர்கள் மட்டுமே இவ்விருதினிற்கு தகுதி உடையவர்களாவர். பரிசுத்தொகை ஒரு லட்சம் இந்திய ரூபாய் ஆகும்.
இந்தி மொழியில் எழுதப்பட்ட இந்தியாவின் பண்பாடு, கலை, தத்துவம் குறித்த படைப்புகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. பரிசுத்தொகை ஒன்னறை லட்சம் இந்திய ரூபாயாகும்.
சமஸ்கிருத மொழியில் செய்யப்படும் படைப்புகளுக்காக வழங்கப்படும் விருது ஆகும். பரிசுத்தொகை ஒன்னறை லட்சம் இந்திய ரூபாயாகும்.
இந்திய அறிவியல் அறிஞர்களுக்கு, சிறந்த அறிவியல் ஆய்வுக்காக வழங்கப்படும் விருது ஆகும். பரிசுத்தொகை ஒன்னறை லட்சம் இந்திய ரூபாயாகும்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)