கிருஷ்ண மோகன் சேத் | |
---|---|
2வது [[சத்தீசுகர் ஆளுநர்]] | |
பதவியில் 2 சூன் 2003 – 25 சனவரி 2007 | |
சத்தீஸ்கர் முதலமைச்சர் | அஜித் ஜோகி ரமன் சிங் |
முன்னையவர் | தினேஷ் நந்தன் சாகே |
பின்னவர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் |
மத்திய பிரதேச ஆளுநர் (பொறுப்பு) | |
பதவியில் 2 மே 2004 – 29 சூலை 2004 | |
மத்திய பிரதேச முதலமைச்சர் | உமா பாரதி |
முன்னையவர் | இராம் பிரகாசு குப்தா |
பின்னவர் | பல்ராம் சாக்கர் |
9வது திரிபுரா ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 23 சூன் 2000 – 31 மே 2003 | |
திரிபுரா முதலமைச்சர் | மாணிக் சர்க்கார் |
முன்னையவர் | சித்தேஷ்வர் பிரசாத் |
பின்னவர் | தினேஷ் நந்தன் சாகே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திரிபுரா ஆளுநர் 19 திசம்பர் 1939 அலகாபாத், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்பொழுதுஉத்தரப்பிரதேசம், இந்தியா) |
இறப்பு | திரிபுரா ஆளுநர் |
இளைப்பாறுமிடம் | திரிபுரா ஆளுநர் |
துணைவர் | வீணா |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
கிருஷ்ண மோகன் சேத் (Krishna Mohan Seth) இந்தியத் தரைப்படையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்று சத்தீசுகர், மத்திய பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் ஆளுநராக பணிபுரிந்தவர் ஆவார்.
கிருஷ்ண மோகன் சேத் டிசம்பர் 19, 1939 அன்று அலகாபாத்தில் பிறந்தார்.[1] இவருக்கு வீணா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
லெப்டினன்ட் ஜெனரல் சேத் இந்திய ராணுவத்தின் பீரங்கி படையில் நியமிக்கப்பட்டார். இவர் மார்ச் 1979 மற்றும் அக்டோபர் 1980 க்குஇடையில்[2] (வான்குடை) படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கினார்.
இவர் போபாலில் 21வது தாக்குதல் படைப்பிரிவினை வழிநடத்தியவர்.[3] இதைத் தொடர்ந்து அக்டோபர் 1994 மற்றும் அக்டோபர் 1995க்கு இடையில் நாகாலாந்தில் 3வதுப் படைப்பிரிவின் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] பின்னர் துணை தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டார். சேத் 31 திசம்பர் 1997 அன்று இராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]
சேத் 23 சூன் 2000 முதல் 31 மே 2003 வரை திரிபுராவின் ஆளுநராக இருந்தார்.[6] இதைத் தொடர்ந்து 2 சூன் 2003 முதல் 25 சனவரி 2007 வரை சத்தீசுகர் ஆளுநராகப் பதவி வகித்தார். சத்தீசுகரின் காங்கரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அடர்வன போர் பள்ளியானது, இவரது ஆட்சிக் காலத்தில் இவரது சிந்தனையின் அடிப்படையில் உருவானது.[7]
இவர் 2 மே 2004 மற்றும் 29 சூன் 2004 இடையே மத்திய பிரதேசத்தின் ஆளுநராகப் பொறுப்பிலிருந்தார்.[8][9]
இவர் பன்னாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி குழுவின் ஆசிய திரைப்பட தொலைக்காட்சி அகதமியின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.[11]
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)