ராஜா கிருஷ்ணசந்திர ராய் | |
---|---|
ராஜா, நாய்டாவின் நிலச்சுவான்தார் | |
நாய்டாவின் மகாராஜா | |
ஆட்சிக்காலம் | 1727 - 1772 |
முன்னையவர் | ராஜா ரகுராம் ராய் |
ராஜ கிருஷ்ணச்சந்திரா (பிறப்பு கிருஷ்ணசந்திர ராய் 1710-1783) ஒரு ராஜாவும் [1] [2] மற்றும் இந்தியாவின், மேற்கு வங்காளத்தில், கிருஷ்ணாநகர், நாடியா பகுதியின் நிலச்சுவான்தாரும் ஆவார். 1728 ஆம் ஆண்டு முதல் 1782 ஆம் ஆண்டு வரை இவர் ஆட்சி செய்தார்.[3] இவர் நாடியா ராஜ் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1968 ஆம் ஆண்டின் வங்காள வரலாறு முகலாய காலம் 1526-1762 இன்படி, கிருஷ்ணச்சந்திரா "அந்தக் காலத்தின் வங்காளத்தின் இந்து சமுதாயத்தில் மிக முக்கியமான மனிதர்" என குறிப்பிடப்படுகிறார்.[4] முகலாய ஆட்சிக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததற்காக மட்டுமல்லாமல், அவரது இராச்சியத்தில் கலைகளின் வளர்ச்சிக்காக கலைகளுக்கு ஆதரவளித்ததற்காகவும் பாராட்டப்பட்டார்.
அவரது ஆட்சிக் காலத்தில், கிருஷ்ணச்சந்திரா இந்து மத நடைமுறைகளில் அதிக பிடிப்பு கொண்டவராக இருந்தார். அதனால்தான் பிக்ராம்பூரைச் சேர்ந்த ராஜா ராஜ்பல்லப் சென் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்வதற்கு சமயத்தில் உள்ள தடைகளை நீக்கி ஆதரவு பெற தனது பண்டிதர்களின் உதவியை நாடினார். [5] கிருஷ்ணச்சந்திரர் இந்த செயலை கடுமையாக எதிர்த்தார். கிருஷ்ணச்சந்திராவின் எதிர்ப்பால், ராஜ்பல்லாப் அவர் விரும்பிய மாற்றத்தை செய்ய முடியவில்லை. [6]