கிருஷ்ணசாமி சுப்ரமணியன் | |
---|---|
![]() கே. சுப்பிரமணியன் | |
பிறப்பு | 19 சனவரி 1929 திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு |
இறப்பு | 2 பிப்ரவரி 2011 |
இருப்பிடம் | புதுதில்லி |
தேசியம் | இந்தியர் |
கல்வி | மாநிலக் கல்லூரி, சென்னை இலண்டன் பொருளியல் பள்ளி |
பணி | போர்த்திறன் சார்ந்த பகுப்பாளர் |
வாழ்க்கைத் துணை | சுலோச்சனா |
பிள்ளைகள் | விஜய், சுப்பிரமணியம் செயசங்கர், சஞ்சய் சுப்ரமணியம் |
கிருஷ்ணசாமி சுப்பிரமணியன் (Krishnaswamy Subrahmanyam) (19 சனவரி 1929 – 2 பிப்ரவரி 2011), முன்னாள் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், பன்னாட்டு போர்த்திறன் நடவடிக்கைகள் தொடர்பான வல்லுநரும், இதழியலாளரும் ஆவார்.[1][2][3]
இந்தியப் பாதுகாப்புத் துறை நடவடிக்கைளில் இவரது நீண்டகால பங்களிப்பு அளப்பரியது. மேலும் இவர் பன்னாட்டு போர்த்திறன் பகுப்பாய்வு திறன் மிக்கவராகவும், இந்தியாவின் அணுசக்தித் துறையின் கொள்கைகளில் சிறப்பான முடிவு எடுப்பவராகவும் அறியப்படுகிறார்.[4][5][6] இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் [7] இரண்டாவது இயக்குநராக பணியாற்றியவர்.
இவர் 2007-இல் இந்திய - அமெரிக்க குடிமை அணுசக்தி ஒப்பந்ததம் ஏற்பட முக்கிய பங்காற்றியவர்.[8][9]
இவரது மகன்களில் இரண்டாமவரான சுப்பிரமணியம் செயசங்கர், இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாகவும், இறுதியில் அமெரிக்கா தூதராகவும் பின்னர் சனவரி 2015-இல் இந்திய வெளியுறவுத் துறை செயலாளாராகவும் பணியாற்றியவர்.[10] 30 மே 2019 அன்று இரண்டாம் முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[11]
இவரது மூன்றாம் மகனான சஞ்சய் சுப்ரமணியம், இந்தியவியல் அறிஞர். இவர் தற்போது அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக உள்ளார்.