கிருஷ்ணா தீரத்து | |
---|---|
![]() தீரத்து 2012இல் | |
மத்திய அமைச்சர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் | |
பதவியில் மே 31, 2009 – மே 26, 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
பின்னவர் | மேனகா காந்தி (பாரதிய ஜனதா கட்சி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 மார்ச்சு 1955 கரோல் பாக், நியூ டெல்லி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (2019-முதல்) (2015க்கு முன்) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி (2015–2019) |
துணைவர் | விஜய குமார் |
பிள்ளைகள் | 3 மகள்கள்: சிக்சா தீரத்து கீர்த்தி தீரத்து யாசவி தீரத்து |
வாழிடம் | புது தில்லி |
கிருஷ்ணா தீரத்து (Krishna Tirath) என்பவர் (பிறப்பு 3 மார்ச் 1955) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் 15வது இந்திய மக்களவைத் தேர்தலில் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் மன்மோகன் சிங் அமைச்சகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மாநில அமைச்சராக (தன்னாட்சி பொறுப்பு) இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியிலிருந்து வெளியேறி, 19 ஜனவரி 2015 அன்று அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் மார்ச் 2019இல் அவர் மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
இவர் தில்லியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1984 முதல் 2004 வரை தில்லி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1998 ஆம் ஆண்டில், சீலா தீக்சித் தலைமையிலான தில்லி அரசாங்கத்தில் சமூக நலன், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர், மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக பணியாற்றினார். முதல்வர் இவரை அதிருப்தி குழுவின் ஒரு பகுதியாக அவதானித்து தனது முழு அமைச்சரவையையும் கலைத்துவிட்டு விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[1] 2003ல் முதலமைச்சரின் ராஜினாமாவினை அடுத்து தில்லி சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகரானார்.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு அனிதா ஆர்யாவை வென்று பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், வடமேற்கு தில்லி மக்களைவைத் தொகுதியிலிருந்து மீரா கன்வாரியாவை தோற்கடித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக, தீரத்து "பெண்களுக்கு முழுமையான அதிகாரமளிப்பை ஆதரிப்பது, குழந்தைகள், இளம்பெண்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போதுமான மற்றும் முழுமையான கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தல், சமூகத்தின் பொறுப்பான மற்றும் மகிழ்ச்சியான குடிமக்களாகக் குழந்தைகள் வளர வாய்ப்பளிக்கும்” திட்டங்களுக்கு முன்னுரிமை செலுத்தினார்,[3]
இந்தியக் கணவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தங்கள் மனைவிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தினை தீரத்து முன்மொழிந்தார். இதன் முக்கிய அம்சம் பெண்கள் வீடுகளில் தனது குடும்பத்திற்காகச் செய்யும் வேலையினை மதிப்பிடுவதாகும். மேலும் பெண்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்திற்காகச் செய்யும் வேலைக்கு சமூக அதிகாரம் அளிப்பதும் இதன் குறிக்கோள் ஆகும்.
2012ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் கேத்லீன் செபிலியஸுடனான சந்திப்பில், தீரத்து இந்தியாவில் உள்ள குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த தனது கவலையைத் தெரிவித்தார். குழந்தை இறப்பைத் தடுப்பதற்காகக் கல்வி, நோய்த்தடுப்பு மற்றும் கூடுதல் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் போன்ற நிறுவனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.[4]
24 ஜனவரி 2010 அன்று பாக்கித்தானின் முன்னாள் விமானப்படைத் தளபதி தன்வீர் மகமூது அகமது சீருடையில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் ஒரு முழு பக்க செய்தித்தாள் விளம்பரத்தில் தோன்றினார் (கீழே உள்ள வெளிப்புற இணைப்புகளைப் பார்க்கவும்). இந்த விளம்பரம் தேசிய பெண் குழந்தை நாளினை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி. அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் திருமதி தீரத்து தனது அமைச்சின் சார்பாக நிகழ்ந்த பிழையை ஏற்க மறுத்து, ஊடகங்கள் மீது குற்றம் சாட்டினார். மேலும் "படத்தை விடச் செய்தி முக்கியமானது" என்றும் கூறினார். புகைப்படம் வெறும் குறியீடாகும் என்றும் தெரிவித்தார். பெண் குழந்தைகளுக்கான செய்தி மிகவும் முக்கியமானது, பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.[5] அரசாங்க விளம்பரத்தில் முன்னாள் பாக்கித்தான் விமானப்படைத் தளபதியின் புகைப்படத்தை வெளியிட்டதற்காகப் பின்னர், தனது அமைச்சகத்தின் சார்பில் வருத்தம் தெரிவித்தார். விசாரணைக்குப் பின்னர் இந்த தவற்றுக்குக் காரணம் யார் என்று தெரியவரும் என் தெரிவித்தார்.[6] இது அறியாமல் நிகழப்பட்ட தவறு எனத் தெரிவிக்கப்பட்டது.[7]
13 செப்டம்பர் 2010 அன்று, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அரசுத் தொலைத்தொடர்பு தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சியில் நிருபர் பதவிக்குக் கிருஷ்ணா தீரத்தின் மகள் யாசவி தீரத்தின் தேர்வினை ரத்து செய்தது.[8]
19 ஜனவரி 2015 அன்று, பாஜக தலைவர் அமித் சாவினைச் சந்தித்த பிறகு இவர் முறையாக பாஜகவில் சேர்ந்தார்.[9] இவர் 2015 தில்லி சட்டமன்றத் தேர்தலில் பட்டேல் நகரிலிருந்து (தில்லி சட்டமன்றத் தொகுதி) பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அசாரி லால் சவுகானால் 34,638 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.[10] மார்ச் 2019 இல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு வெளியேறி மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
{{cite web}}
: |first3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)