இந்திய தேசிய மகளிர் 19 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து அணி
3
(1)
2013–
இந்திய தேசிய மகளிர் கால்பந்து அணி
85
(22)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 26 பிப்ரவரி 2025 அன்று சேகரிக்கப்பட்டது.
கிரேஸ் டாங்மெய் (Grace Dangmei) ஓர் இந்திய கால்பந்து வீரர் ஆவார். இவர் கிக்ஸ்டார்ட் கிளப் மற்றும் இந்திய மகளிர் தேசிய அணிக்காக முன்கள வீராங்கனையாக விளையாடி வருகின்றார்.[1]கிரேஸ் 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் [2] மேலும், 2016ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கைக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்துள்ளார்.[3][4] 2016 ம் ஆண்டு தெற்காசிய கால்பந்து பெடரேசன் மகளிர் சாம்பியன்ஷிப்பின் போது, இறுதிப் போட்டியின் முதல் பாதியில் கிரேஸ் ஒரு கோல் அடித்து, இந்தியா தொடர்ந்து நான்காவது முறையாக இந்தப் போட்டியில் பட்டத்தை வெல்ல உதவினார். [5][6]
கிரேஸ் டாங்மெய் சைமன் டாங்மெய் மற்றும் ரீட்டா டாங்மெய் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சூரசந்த்பூர் மாவட்டம், காங்வாய் துணைப்பிரிவின் டிம்டைலாங் கிராமத்தைச் சேர்ந்த ரோங்மெய் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[7] கிரேஸ் 1996 ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி பிறந்தார்.
டாங்மெய் இந்திய மகளிர் லீக்கின் தொடக்கப் பதிப்பில் கெ ஆர் ஒய் பி எச் எஸ் ஏ உடன் விளையாடினார். மேலும் அந்த கிளப்பில் மற்றொரு சீசனை வரை விளையாடி வந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு IWL இன் 3வது லீக்கில் சேது என்பவருடன் இணைந்தார். 2018 ஆண்டு இந்திய மகளிர் லீக்கின் போது, கிரேஸ்க்கு வளர்ந்து வரும் வீராங்கனை விருது வழங்கப்பட்டது.[8] 2019 ஆண்டு மே மாதம் 6 ந் தேதி அன்று மணிப்பூர் போலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு எதிரான சேது FC உடனான தனது முதல் போட்டியில் இரட்டை கோல்கள் அடித்து, 2018–19 ஆண்டு IWL சீசனை வென்றார்.
கிரேஸ் டாங்மெய் 2021 ஆண்டில் கோகுலம் கேரளா அணியில் சேர்ந்தார், [9] இந்த அணியின் துணைத் தலைவர் பதவியைப் பெற்றார். பின்னர் 2021 ஆண்டு ஜூலை மாதம் 15 தேதியன்று, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, மகளிர் கிளப் சாம்பியன்ஷிப் 2020–21 பைலட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த கோகுலம் கேரளாவை பரிந்துரைத்தது.[10] கிரேஸ் 2021ஆண்டு மகளிர் கிளப் சாம்பியன்ஷிப்பின் போட்டிகளில் விளையாடினார். நவம்பர் 14 அன்று உஸ்பெகிஸ்தானின் பெண்கள் அணியான FC புன்யோட்கோர் (பெண்கள்) அணிக்கு எதிராக இவர் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் இவரது அணி 3–1 என்ற கணக்கில் வென்றது.[11][12][13] இந்தக் போட்டியில், இவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். 2021–22 சீசனில், இவரது அணி கோகுலம் கேரளா பட்டத்தை வென்றது. மேலும் மகளிர் கிளப் சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றது.
2022 ஆண்டு, ஜூலை மாதம், 2ம் நாள் அன்று, கிரேஸ் உஸ்பெக் மகளிர் லீக் அணியான நாசாப் கர்ஷியுடன் [14][15] ஒரு சீசன் நீண்ட ஒப்பந்தத்தில் வெளிநாட்டில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது. [16] அந்த ஆண்டில் தனது உஸ்பெக் அணி லீக் மற்றும் கோப்பை இரண்டையும் வெல்ல சிறப்பாக விளையாடிஉதவினார், 14 லீக் போட்டிகளில் 4 கோல்களை இவர் அடித்தார்.
கிரேஸ் 2014 ஆண்டில் இந்தியாவின் 19 வயதிற்க்கு உட்பட்ட அணியில் விளையாடினார்.
எனது பெற்றோர் முதல் நான் பயிற்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் நான் விளையாடிய வீரர்கள் வரை, எனக்கு எப்போதும் கிடைத்த ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். FIFA தரவரிசையில் ஆண்கள் அணியை விட நாங்கள் மிகவும் முன்னேறி இருக்கிறோம் என்பதை மக்கள் உணரவில்லை என்று நினைக்கிறேன், மேலும் சில நேரங்களில் எங்களுக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம், ஆனால் நாங்கள் மேலும் மேலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதால், அது மாறும் என்று நம்புகிறேன்.
— கிரேஸ் டாங்மெய், கால்பந்துடனான தனது பயணத்தில்.[17]
2013 ஆம் ஆண்டு AFC தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சீனியர் சர்வதேச அளவில் அறிமுகமான கிரேஸ், பெண்கள் தேசிய அணியில் வழக்கமான உறுப்பினரானார்.[18] தேசிய அணியுடன் ஆறு ஆண்டுகளில், இவர் 37 போட்டிகளில் பங்கேற்று 14 கோல்களை அடித்துள்ளார்.[19] பின்னர், 2019 ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், நேபாளத்தை தோற்கடித்து தங்கம் வென்றனர். 2020 ஆண்டு, மகளிர் ஒலிம்பிக் தகுதிச் சுற்று 2 போட்டியில் இந்தோனேசியாவுக்கு எதிராக அவர் பெற்ற இரட்டை கோல்கள், அவருக்கு பிரபலமான புகழைப் பெற்றுத் தந்தன.[17]
2021 ஆம் ஆண்டு மனாஸில் நடந்த சர்வதேச மகளிர் கால்பந்து போட்டியில் கிரேஸ் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு அவர்கள் பிரேசில், [20][21] மற்றும் சிலி போன்ற அணிகளை எதிர்கொண்டனர். டிசம்பர் 1 ஆம் தேதி வெனிசுலாவுக்கு எதிராக 2–1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததில் இவர் ஒரு கோல் அடித்தார்.[22]
2022ஆண்டு,செப்டம்பர் மாதம், 7ந் தேதி அன்று, நேபாளத்தில் நடந்த SAFF மகளிர் சாம்பியன்ஷிப்பில், பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற வெற்றியில் அவர் ஒரு கோல் அடித்தார்