கிர்கங்கா தேசிய பூங்கா (Khirganga National Park) இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்கா ஆகும். இது 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
கிர்கங்கா தேசிய பூங்கா குலுவில் அமைந்துள்ளது. இந்திய நாட்டின் மிக அழகான தேசிய பூங்காக்களில் ஒன்றாக இது அறியப்படுகிறது. இந்த அற்புதமான நிலப்பரப்பில் பசுமையான மலைகள், அடர்த்தியான பச்சை புதர்கள், உயரமான மரங்கள் மற்றும் பழமையான ஓய்வு இல்லங்கள் அமைந்த இடமாக உள்ளது. இந்த தேசிய பூங்கா சுமார் 710 சதுர கிலோமீட்டர்கள் (270 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. [1][2]
சுற்றுலாப் பயணிகள் பூங்காவின் மையத்தில் அமைந்த பாதையை வழிச் சென்று இந்த இடத்திற்கே உரியtத் தாவர விலங்குகளைக் காணலாம். இங்கே, பல்வேறு வகையான பறவை இனங்களைக் காணலாம். இயற்கை ஆர்வலர்களுக்கும், வனச்சுற்றுலா செல்பவர்களுக்கும் புகலிடமாக இந்தத் தேசியப் பூங்கா உள்ளது. நகர வாழ்க்கையில் அல்லலுறும் மக்களுக்கு மன அமைதி தரும் இடமாக இந்தப் பூங்கா உள்ளது.