கிர்பால் சிங் நரங் | |
---|---|
பிறப்பு | அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா | 12 ஏப்ரல் 1912
இறப்பு | 07-05-2019 சண்டிகர் |
விருதுகள் | பத்ம பூசண் |
கிர்பால் சிங் நரங் (Kirpal Singh Narang) என்பவர் இந்திய வரலாற்றாசிரியர், கல்வியாளர் மற்றும் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ஆவார்.[1] இவர் இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் வரிசையில் இரண்டாவதாகவும் (1966-75) அவர்களில் மிக நீண்ட காலம் பணியாற்றியவரும் ஆவார்.[2] பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிறந்தார்.[3] இவர் பஞ்சாப் மற்றும் சீக்கியர்களின் வரலாறு குறித்த பல புத்தகங்களை வெளியிட்டார். இதில் பஞ்சாப் வரலாற்றின் நான்கு தொகுதிகள்[4][5][6][7] மற்றும் ஒரு இசுலாம் பற்றிய புத்தகம் அடங்கும்.[8] கல்வி மற்றும் இலக்கியத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, 1975ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்குப் பத்ம பூசண் என்ற மூன்றாவது உயரிய குடிமகன் விருதை வழங்கியது.[9]