கிறித்தி ஏ. திரெமாண்டி Christy A. Tremonti | |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகம் அரிசோனா பல்கலைக்கழகம் கால்கேட் பல்கலைக்கழகம் |
பணி | உதவிப் பேராசிரியர், விசுகான்சின் பல்கலைக்கழகம், மாடிசன்]] |
அறியப்படுவது | வானியல் |
வலைத்தளம் | |
http://www.astro.wisc.edu/our-people/faculty/tremonti/ |
கிறித்தி ஏ. திரெமாண்டி (Christy A. Tremonti) ஓர் அமெரிக்க நோக்கீட்டு வானியலாளர் ஆவார். இவர் மாடிசனில் அமைந்த விசுகான்சின் பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் புல உறுப்பினராக உள்ளார். இவர் 2005 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்தபோது அபுள் ஆய்வுநல்கையைப் பெற்றுள்ளார்.[1] இவர் 1994 இல் தன் இளமறிவியல் பட்டத்தைக் கால்கேட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் தம் முனைவர் பட்ட்த்தை ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் 2003 இல் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை "தாழ் செம்பெயர்ச்சி விண்மீன்கள் உருவாகும் பால்வெளிகளின் இயற்பியல் பண்புகள்: விண்வெளி புற ஊதா, 20,000 SDSS கதிர்நிரல்களில் இருந்து பெறும் பார்வைகள்" என்பதாகும்.[2] இந்த ஆய்வின் மேற்பார்வையாளர் முனைவர் திமோத்தி எம். கெக்மன் ஆவார்.[3]
இவரது ஆர்வம் விண்மீன் உருவாக்கம் நிகழும் பால்வெளிகள்,செயல் முனைவு மிக்க பால்வெளிக் கருக்கள், பால்வெளிக் காற்றுகள், பால்வெளிகளின் இணைவுகள் உள்ளடங்க, பால்வெளி உருவாக்கத்திலும் படிமலர்ச்சியிலும் அமைகிறது இவர் கதிர்நிரலியலிலும் தரவௌகள் திரட்டலிலும் ஆர்வம் கொண்டுள்ளார் இவர் சுலோவான் இலக்கவியல் வானளக்கைத் திட்ட உறுப்பினரும் ஆவார்.[4]
இவர் வானியல் இதழிலும் வானியற்பியல் இதழிலும் அரசு வானியல் கழக மாதவாரி அறிவிப்புகளிலும் 60 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் முழுமையாக arXiv.org எனும் இணையதளத்தில் காணலாம்.[5] பெரும்பாலான அறிவியலாளர்களைப் போலவெ இவர் உலகெங்கணும் உள்ள 150 க்கும் மேற்பட்ட இணயாசிரியர்களுடன் இணைந்து தன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[6] அடிக்கடி இவர் இணைந்தெழுதும் சில இணையாசிரியர்களில் திமோத்தி எம். கெக்மனும்[7] அரோன் வி. பிரிக்மனும் டொனால்டு பி. சுனீடரும் அடங்குவர்.[6] சுக்கோபசு அறிவிப்பின்படி, இவரது கட்டுரைகளின் பரவலான மேற்கோள் சுட்டெண் 2015 மார்ச்சில் 44 ஆகும்.[6]
மேற்கோள் சுட்டெண்ணில் 2015 மார்ச்சு 15 இன்படி இவர் சுலோவான் இலக்கவியல் வானளக்கை சார்ந்த அண்மைக் கால ஆய்வுக் கட்டுரைகளில் மூன்றாமவராக உள்ளார்.[8] இவற்றில் இவர் முதல் ஆசிரியராக அமையும் மிகவும் அடிக்கடி சுட்டப்படும் ஆய்வுக் கட்டுரை, "பொருண்மை-பொன்மத்தன்மை உறவின் தோற்றம்: சுலோவான் இலக்கவியல் வானளக்கையில் 53,000 விண்மீன் உருவாக்கப் பால்வெளிகளின் ஆய்வு சார்ந்து (The origin of the mass-metallicity relation: Insights from 53,000 star-forming galaxies in the Sloan Digital Sky Survey)" என்பதாகும்.[9] இவர்தான் முதன்முதலில் சுலோவான் இலக்கவியல் வானளக்கையில் அதன் புள்ளியியல் திறமையைப் பால்வெளிப் படிமலர்ச்சி ஆய்வுகளில் பயன்படுத்தியவர் ஆவார்.[10]
முனைவர் திரெமாண்டி பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆவார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)