கிறித்தைன் ஜோன்சு போர்மன் Christine Jones Forman | |
---|---|
![]() | |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | [ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையம் |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வார்டு பல்கலைக்கழகம், 1971, 1972, 1974 |
ஆய்வேடு | (1974) |
அறியப்படுவது | இயக்குநர், புடவி கமுக்கங்கள் அறிதல் கூட்டிணையம்[1] ஓம்புநர், அறிவியல் ஒளிப்பொழிவு[2] |
விருதுகள் | புரூனோ உரோசி பரிசு,[3] சுமித்சோனிய நிறுவன 2013 ஆம் ஆண்டு செயலாளரின் தகைமை ஆராய்ச்சி விருது[4] |
துணைவர் | வில்லியம் "பில்" ஆர். போர்மன் |
கிறித்தைன் ஜோன்சு போர்மன் (Christine Jones Forman) சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் முதுநிலை வானியற்பியலாளர் ஆவார்.[1] இவர் நடப்பு அமெரிக்க வானியல் கழகத் தலைவரும் புடவி கமுக்கங்கள் அறிதல் கூட்டிணைய இயக்குநரும் ஆவார்.[5]
இவர் உயர்நிலைப் பள்ளியில் உரோசு கணிதவியல் நிகழ்ச்சியிலும் உயர்நிலைப் பள்ளியின் தகுதிவாய்ந்த மாணவருக்கன ஆர்னால்டு உரோசு கோடைக் கணிதவியல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இவர் ஓகியோ மேற்கு கரோல்டன் உயர்நிலைப் பள்ளியில் தன் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் மசாசூசட்டில் இருந்த கேம்பிரிட்ஜில் சேர்ந்து இங்கு இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வானியற்பியலில் மூன்று பட்டங்களைப் பெற்றார்: இவற்ரில் இளங்கலைப் பட்டத்தை 1971 இலும் முதுகலைப் பட்டத்தை 1972 இலும் முனைவர் பட்டத்தை 1974 இலும் பெற்றார். இவர் மாணவராக இருந்தபோது வானியற்பியல் மையத்தில் முதுமுனைவர் ஆய்வாளராகவும் ஆர்வார்டு இளநிலை ஆய்வாளராகவும் விளங்கியுள்ளார்.[1]
இவர் 1973 இல் இருந்து சுமித்சோனிய வாணியற்பியல் நோக்கீட்டகத்தில் வானியற்பியலாளராக இருந்தார். இதற்கு முன் 1990 முதல் 2010 வரைசந்திதிரா அளவீட்டுக் குழுவில் பணிபுரிந்தார்.[4] இவர் 2010 இல் புடவி கமுக்கங்கள் அறியும் கூட்டிணையத்தின் இயக்குநராக அமர்த்தப்பட்டார். மேலும், சுமித்சோனிய நிறுவனத்தின் செயல்நெறிமுறைத் திட்ட நான்கு அறைகூவல்கள் கூட்டிணைய நான்கு இயக்குநரில் ஒருவராகவும் அமர்த்தப்பட்டார்.[1]
இவரும் இவரது கணவர் வில்லியம் ஆர். போர்மனும் புரூனோ உரோசி பரிசை முதன்முதலாகப் பெற்றனர். இப்பரிசு ஒவ்வோராண்டும் அமெரிக்க வானியல் கழகத்தால் " உயர் ஆற்ரல் வானியற்பியலில் கணிசமான பங்களைப்பை ஆற்றியவருக்கு குறிப்பாக மிக அண்மை முன்முனைவுப் பணிக்கு வழங்கப்படுகிறது."[6] இவர்கள் இருவரும் "தொடக்கநிலைப் பால்வெளிகளின் of X-கதிர் உமிழ்வு ஆய்வில் நிகழ்த்திய முன்னோடி பணிகளுக்காக" 500 டாலர் பணமுடிப்பும் சான்றிதழும் பெற்றனர்.[3]
இவர் 2013 இல் சுமித்சோனிய நிறுவனத்தின் செயலாளரின் தகவுறு ஆராய்ச்சி விரிவுரைத் தகைமை 14 ஆம் விருதைப் பெற்றார்.[4]
இவர் வானியற்பியலாளராகிய பில் போர்மனை மணந்தார். இவர்களுக்கு ஜூலியா, டேனியல், மிராண்டா என மூன்று குழந்தைகள் உண்டு.[1]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)