கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப்

கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப்
பிறப்பு22 சூன் 1909
வியன்னா
இறப்பு11 சூன் 1995 (அகவை 85)
பணிமானிடவியலர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
வேலை வழங்குபவர்
  • School of Oriental and African Studies, University of London

கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப் ( Christoph von Fürer-Haimendorf 22 சூன் 1909–11 சூன் 1995) என்பவர் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த மாந்தவியல் ஆய்வறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.

இளமைக்காலம்

[தொகு]

ஆத்திரியாவில் வளமான குடும்பத்தில் பிறந்த கிறித்தோபர் மாந்தவியல் மற்றும் புதைபொருள் ஆய்வியல் ஆகியவற்றை இளமையில் கற்றார். இரவீந்திரநாத் தாகூர் பற்றிய வாழ்க்கை வரலாறு அவருடைய படைப்புகள் ஆகியவற்றைப் படித்தார்.

பணிகள்

[தொகு]

1936 இல் இந்தியாவுக்கு வந்து நாகர்கள் வாழ்க்கை மொழி நாகரிகம் போன்றவற்றை ஆய்வு செய்தார். இதன்பொருட்டு அந்தப் பகுதி நாகர்களுடன் வாழ்ந்து பழகி அவர்களுடைய மொழியையும் கற்றுக் கொண்டார்.

மேலும் வடகிழக்கு இந்தியாவிலும் தெலுங்கானாவிலும் நேப்பாளத்திலும் தங்கி அந்தப் பகுதி மலைவாழ் மக்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

அசாம் மக்களின் வாழ்க்கை, அங்குள்ள சமூக இயக்கங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்தார்.[1]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • தன் வரலாறு
  • இமாலய காட்டுமிரான்டிக் காலம்
  • ஆந்திரப் பிரதேச கோன்டர்கள்
  • திபெத்திய நாகரிக மறுமலர்ச்சி
  • இந்தியாவின் மலைவாழ் மக்கள்
  • தெற்காசிய சமூகங்கள் --விழுமியங்களும் சமூகக் கட்டுப்பாடுகளும்.
  • நாகலாந்து பற்றிய மாந்தவியலாளரின் கருத்துக்கள்

மேற்கோள்

[தொகு]