கிறிஸ்டி கோல்ட்ஃபஸ் (Christy Goldfuss) என்பவர் ஒர் அமெரிக்க அரசாங்க அதிகாரி ஆவார். சுற்றுச்சூழல் தரத்திற்கான குழுவில் 2015 முதல் 2017 வரை பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், அவரது நிர்வாகத்தின் கீழிருந்த தேசிய பூங்கா சேவையின் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.[1] அவர் இயற்கை வளங்கள் பற்றிய குழுவில் ஒரு நிருபராகவும், சட்டமன்ற ஊழியராகவும் பணியாற்றினார்.[1]
பூங்கா சேவையில் சேருவதற்கு முன்பு, அவர் அமெரிக்க முன்னேற்றத்திற்கான மையத்தில் [2] ஒரு தாராளவாத சிந்தனைக் குழுவின் பொது நிலத் திட்டத்தின் தலைவராக இருந்தார்.[3]
பராக் ஒபாமாவின் அதிபர் பதவியின் முடிவைத் தொடர்ந்து, கோல்ட்ஃபஸ் மீண்டும் அமெரிக்க முன்னேற்றத்திற்கான மையத்தில் சேர்ந்தார்.[4] அவர் தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[5]