தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கிறிஸ்டினா மரியா கோஃப் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 18 பெப்ரவரி 1994 ஆம்பர்கு, ஜெர்மனி | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது கை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 5) | 26 ஜூன் 2019 எ. இசுகொட்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 3 ஜூலை 2022 எ. நமீபியா | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 27 | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2012 | வார்விக்சியர் பெண்கள் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2015–தற்போது வரை | ராட் ஜெல்ப் (ஆம்பர்கு) | |||||||||||||||||||||||||||||||||||||||
2022 | வார்விக்சியர் பெண்கள் துடுப்பாட் | |||||||||||||||||||||||||||||||||||||||
2023–தற்போது வரை | ஸ்டாஃபோர்ட்ஷையர் பெண்கள் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 18 November 2022 |
கிறிஸ்டினா மரியா கோஃப் ( Christina Maria Gough; பிறப்பு: பிப்ரவரி 18, 1994) ஓர் ஜெர்மன் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தேசிய துடுப்பாட்ட அணிக்காக [[பன்முக வீரர்|பன்முக வீரராக விளையாடுகிறார். அனைத்து பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விக்கெட் இழப்பின்றி ஒரு அணியின் அதிகபட்ச ஓட்டம் எடுத்து (துடுப்பாட்டங்களுக்கானது) புதிய சாதனையை இவர் இரண்டு முறை உருவாக்கினார்.
2021 துடுப்பாட்டப் போட்டியின் முடிவில், பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் எந்த வீராங்கனை வைத்திராத அதிகபட்ச மட்டையடி சராசரியை 22 போட்டிகளில் இருந்து 42.23 சராசரியாகக் கொண்டிருந்தார். அதில் இவர் மொத்தம் 549 ஓட்டங்கள் எடுத்தார்.
கிறிஸ்டினா கோஃப் ஒரு ஜெர்மன் தாய்க்கும் மற்றும் ஆங்கிலேய தந்தைக்கு ஆம்பர்கில் பிறந்தார். [1] இவர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் வளர்ந்தார்.[2] அங்கு இவர் வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் சோலிஹல்லில் உள்ள சோலிஹல் பள்ளியில் பயின்றார்.[3] இவர் தனது 10 வயதில் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனது மூத்த சகோதரருடன் தங்களது தோட்டத்தில் விளையாடினார். பின்னர் ஒரு சங்கத்தில் சேர்ந்து விளையாடினார்.[4]
2007 முதல் 2011 வரை, கோஃப் இங்கிலாந்தின் வார்விக்சயர் அணிக்காக இளையோர் அணிகளில் விளையாடினார். [5] 2014 மற்றும் 2016 க்கு இடையில், கேம்பிரிட்சு பல்கலைக்கழக பெண்களுக்கு எதிராக ஆக்சுபோர்டு பல்கலைக்கழக பெண்கள் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடினார்.[6] பின்னர் ஆம்பர்கு திரும்பினார்.[3]
ஆம்பர்க்கிற்கு நிரந்தரமாகச் செல்வதற்கு முன்பே கோஃப் முதலில் ஜெர்மன் தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] மே 2015 இல், டென்மார்க்கின் உசும் நகரில் டென்மார்க்கிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் ஜெர்மனிக்காக விளையாடினார். இருபது20 வடிவத்தில் நடந்த அந்தத் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில், இவர் ஜெர்மனிக்காக முறையே 43 மற்றும் 59* ஓட்டங்களை அதிகபட்சமாக அடித்தார்.
2012 இல், கோஃப் வார்விக்சயர் முதல் பதினோரு பேரின் ஒரு பகுதியாக இருந்தார். [7] அந்த பருவத்தின் மகளிர் கவுண்டி போட்டிகளில் இது பிரிவு 2 சாம்பியனாக இருந்தது.[5] 2022 பெண்கள் இருபது20 கோப்பைக்காக வார்விக்சயர் அணிக்காக விளையாட கோஃப் திரும்பினார்.[8] இவர் 2023இல் மேற்கு மிட்லாண்ட்ஸ் பிராந்திய கோப்பையில் ஸ்டாஃபோர்ட்ஷையர் அணிக்காக விளையாடினார்.[9]
ஆம்பர்க்கிற்குச் சென்றதிலிருந்து, 2019 இல் ஜெர்மன் பெண்கள் பன்டெஸ்லிகா வாகையாளர் போட்டியை வென்ற ராட் ஜெல்ப் மகளிர் அணிக்காக கோஃப் விளையாடினார். [10] இவர் அல்டோனா 93 என்ற கால்பந்து சங்க அணிக்காக கால்பந்தும் விளையாடி வருகிறார்.[11]
விளையாட்டைத் தவிர ஆம்பர்க்கில் உள்ள புள்ளியியல் சேவை வழங்குனருக்கான தரவு ஆய்வாளராகவும், ஒரு சுயாதீன மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார்.[3]