கிறிஸ்டோபர் டி. போர்டு (ஆங்கில மொழி: Christopher D. Ford) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான 'ஐ கேன் சீ யூ' என்ற திகில் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.[1] அதை தொடர்ந்து 2012 இல் வெளியான 'ரோபோ & பிராங்க்'[2] என்ற படத்தில் திரைக்கதை எழுத்தாளராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார். இவர் க்ளோன்[3] (2014), காப் கார்[4] (2015) மற்றும் இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[5] (2017) போன்ற படங்களில் இயக்குநர் ஜோன் வாட்ஸ் என்பவருடன் இணைந்து பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.