கிளாடியா தெ இராம் ((Claudia de Rham) ஒரு சுவிசுகோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார், இவர் ஈர்ப்பு அண்டவியல், துகள் இயற்பியல் ஆகியவற்றின் இடைமுகத்தில் பணிபுரிகிறார். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பயின்று வருகிறார். பெருந்திரள் ஈர்ப்பு கோட்பாட்டை புத்துயிர் பெறச் செய்ததற்காக 2018-ஆம் ஆண்டில் இளம் அறிவியலாளர்களுக்கான பிளேவட்னிக் விருதுக்கான இயல் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் இங்கிலாந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார், 2020 ஆம் ஆண்டில் விருதை வென்றார்.
இவர் இலவுசான்னியில் பிறந்தார்.[1] 2000 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள எக்கோல் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்பியலில் பொறியியல் பட்டம் பெற்று பிரான்சில் தனது இளங்கலை படிப்பை முடித்தார்.[2] 2001 ஆம் ஆண்டில் (எக்கோல் பாலிடெக்னிக் ஃபெடரல் டி லாசான்- ஈ. பி. எஃப். எல்) இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] 2002 ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்துக்குச் சென்றார் , கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதம், கோட்பாட்டு இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.[3] அவர் ஒரு விமானியாகப் பயிற்சி பெற்று, ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீரர் தேர்வு செயல்முறையின் பல கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
தனது முனைவர் பட்டத்திற்குப் பிறகு, இவர் மாண்ட்ரீலுக்குச் சென்று மெக்கில் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் சேர்ந்தார்.[4][5] அவர் 2006 இல் மெக்மாசுட்டர் பல்கலைக்கழகம், கோட்பாட்டு இயற்பியலுக்கான பெரிமீட்டர் நிறுவனத்திற்குச் சென்றார் , அங்கு அவர் அண்டவியலில் கூட்டு முதுமுனைவர் பதவியில் பணியாற்றினார்.[6] 2010 ஆம் ஆண்டில் அவர் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக சேர்ந்தார்.[7][8] அவர் 2011 இல் கேசு வெசுட்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று 2016 இல் அங்கு இணைப் பேராசிரியராக ஆனார்.[9][10] அவர் 2016 இல் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் சேர்ந்தார். 2016 ஆம் ஆண்டில் அரசு கழகத்தின் " அண்டவியல் முதல் செறிநிலைப் பொருள் அமைப்புகள் வரையிலான பெருந்திரள் ஈர்ப்பு " பணிக்காக100,000 பவுண்டு வொல்ப்சன் தகைமை விருது அவருக்கு வழங்கப்பட்டது.[11][12]
அவரது ஆராய்ச்சி கோட்பாட்டு அண்டவியல் பகுதியில் உள்ள அண்டத்தின் முடுங்கிய விரிவாக்கத்தை விளக்கக்கூடிய ஈர்ப்பு ழ்படிமங்களை அவர் ஆராய்ச்சி செய்தார் இவர் பெருந்திரள் ஈர்ப்பு கோட்பாடுகளின் வளர்ச்சியில் முன்னணி ஆராய்ச்சியாளராக ஏற்கப்படுகிறார் , அங்கு ஈர்ப்பு விசையின் ஏந்தியான ஈர்ப்பன் பெரியதாக இருக்கலாம்.[13] 2010 ஆம் ஆண்டில் இவர் பெருந்திரள் ஈர்ப்பு விசையின் ஒரு நேரியல் கோட்பாட்டை உருவாக்கினார் , இது கோட்பாட்டளவில் பொருத்தன புனைவு ஏதும் இல்லாத கோட்பாடாகும்.[14][15] டி ராம், கிரிகோரி கபடாட்சே, ஆந்திரூ ஜே. தோலி ஆகியோரின் கண்டுபிடிப்பின் காரணமாக, இந்தப் பெருந்திரள் ஈர்ப்பு இப்போது " டி ராம் - கபடாட்சே - தோலி " (dRGT) ஈர்ப்பு என்று அழைக்கப்படுகிறது.[14] இவரது ஆராய்ச்சி அண்டவியல் மாறிலி சிக்கலை சமாளிக்க உதவுகிறது. மேலும், அண்டத்தின் முடுங்கிய விரிவாக்கத்தை முற்றிலும் ஈர்ப்பு விளைவு என்று விவரிக்க முடியும். இங்குஈந்தப் பெரிய ஈர்ப்பு விசைகள் இருண்ட ஆற்றல் என்று அழைக்கப்படுகின்றன.[2]
2015 ஆம் ஆண்டில் இவர் ஈர்ப்பனின் இயல்பு என்ற தலைப்பில் ஒரு TEDx உரையை வழங்கினார்.[13][16] இயற்பியலில் பெண்களின் குறைவான பேராண்மை குறித்து சாலைக்காட்சு எண்ணக்கருக்கள்வழி விவாதித்துள்ளார். அவர் கோட்பாட்டு அண்டவியல் பற்றி வழக்கமாக பல பொது சொற்பொழிவுகளை வழங்குகிறார்.[17][18]