Killikolloor | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 8°55′2.76″N 76°37′59.08″E / 8.9174333°N 76.6330778°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் |
நகராட்சி ஆணையம்n | கொல்லம் நகராட்சி ஆணையம் |
அரசு | |
• வகை | நகர் மன்ற உறுப்பினர் |
• நகரத்தந்தை | வி. இராச்சேந்திரபாபு (இந்தியப் பொதுவுடமைக் கட்சி) |
• துணை நகரத்தந்தை | விச்சய பிரான்சிசு |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | டி. மித்ரா, இந்திய ஆட்சிப் பணி |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.24 km2 (4.34 sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691 004 |
தொலைபேசிக் குறியீடு | 0474 |
வாகனப் பதிவு | கேஎல்-02 |
இணையதளம் | www |
கிளிகொல்லூர் (Kilikollur) இந்தியாவின் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும். இப்பகுதி ஒரு முந்திரி தொழில் மையமாக உள்ளது, [1] [2] கிளிகொல்லூர் வாகன உற்பத்தியின் மையமாகவும் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 744 கிள்ளிகொல்லூர் வழியாக செல்கிறது. கொல்லம், பரவூர், புனலூர், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் இரயில்களுக்கான இரயில் நிறுத்தமாக கிளிகொல்லூர் இரயில் நிலையம் உள்ளது. [3] [4]
தங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரி கிளிகொல்லூரில் உள்ளது. [5] கொல்லம் மாநகராட்சியின் மண்டல அலுவலகமும் அருகில் அமைந்துள்ளது.
கிளிகொல்லூர் ஒர் ஊராட்சியாக 1953 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 11.24 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சலுமூடு தொகுதியில் கிளிகொல்லூர் சேர்க்கப்பட்டது. [6] குறைந்தது கி.பி 851 முதல் கொல்லம் இந்தியாவில் வணிக மையமாக இருந்து வருகிறது. [7] 2000-ஆம் ஆண்டு கொல்லம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது, கிள்ளிகொல்லூரும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [8]