நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Octans |
வல எழுச்சிக் கோணம் | 22h 55m 45.509s[1] |
நடுவரை விலக்கம் | -75° 27′ 31.21″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.377[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M3V[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: -1026.327[3] மிஆசெ/ஆண்டு Dec.: -1059.318[3] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 116.4127 ± 0.0291[3] மிஆசெ |
தூரம் | 28.017 ± 0.007 ஒஆ (8.590 ± 0.002 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 10.700 ± 0.0240[4] |
விவரங்கள் [4] | |
ஆரம் | 0.442 ± 0.040 R☉ |
வெப்பநிலை | 3467 ± 100 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 0.95 கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கிளிசே 877 (GLISE 877 / HIP 113229 / LHS 531) என்பது தெற்கு ஆக்டன்சில் சிந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு செங்குறுமீன் ஆகும்.
கிளிசே 877 இன் வெப்பமானி ஒளிர்மை சூரியனில் வெறும் 2.3% மட்டுமே. இது + 10.22 ′ தோற்ற்ரப் பருமையுடன் உள்ளது , எனவே அதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இருப்பினும் , இது மற்ற செங்குறுமீன்களை விட கணிசமான பொலிவுடன் உள்ளது. இது குறிப்பாக சூரிய மண்டலத்திற்கு மிக நெருக்கமான செங்குறுமீன் ஆகும். இது பிராக்சிமா சென்ட்டாரியை விட கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகமாக ஒளிரும். [5][2] M3V′2′ கதிர்நிரல் வகையினதாகும். இதன் விளைவுறு வெப்பநிலை 3390 கெ. பாகை ஆகும். இது ஒரு மாறு விண்மீனாகத் தெரியவில்லை.[2]
கிளிசே 877 சூரிய மண்டலத்திலிருந்து 28.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.[1] இதற்கு[6] அருகில் உள்ள விண்மீன்கள் β ஹைட்ரி, ζ டுகானே என்பன ஆகும் , அவை சூரிய மண்டலத்திலிருந்து முறையே 4.5 மற்றும் 6.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.[1]