கிளென்னிசு பறார் Glennys Farrar | |
---|---|
துறை | துகள் இயற்பியல் |
பணியிடங்கள் | கால்டெக், உருட்கர்சு, நியூயார்க் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழ்கம், பெர்க்கேலி, பிரின்சுட்டன் |
கிளென்னிசு ஆர். பறார் (Glennys R. Farrar) ஓர் அமெரிக்க இயற்பியல் பேராசிரியர். இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் துகள் இயற்பியலிலும் அண்டவியலிலும் கரும்பொருண்ம ஆய்விலும் புலமை சான்றவர்.[1][2]
இவர் தன் இளவல் பட்டத்தை 1968 இல் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் 1971 இல் முனைவர் ஆய்வுக்கு பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிரின்சுட்டனில் இருந்து முதலில் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி ஆனார்.[3][4][5]
கல்வி முடித்ததும் இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலும் உருட்கர்சு பல்கலைக்கழகத்திலும் புல உறுப்பினராகச் சேர்ந்தார் . பிறகு 1998 இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[4] அங்கு இவர் இயற்பியல் துறையின் தளைவராக இருந்து, அண்டவியல், துகள் இயற்பியல் மையத்தை உருவாக்கினார்.[5]
இவர் அங்கே உயராய்வு நிறுவன உறுப்பினராகவும் ஆகியுள்ளார்.[6] இவர் 1975 இல் சுலோவான் ஆராய்ச்சி உறுப்பாண்மையும் நல்கையும் வழங்கப்பட்டார்.[7] இவர் 1984 இலும் 2014 இலும் குகன்கீம் ஆய்வுநல்கையைப் பெற்றுள்ளார். இவர் கோட்பட்டு இயற்பியல் சார்ந்த சீமோன்சு ஆய்வுநல்கைக்கும் தேர்வு செய்யப்பட்டார்.[8][9]