சதுப்புநிலக் காடுகள் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | மலாக்கா நீரிணை |
ஆள்கூறுகள் | 3°00′N 101°18′E / 3.000°N 101.300°E |
பரப்பளவு | 2.70 km2 (1.04 sq mi) |
நிர்வாகம் | |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | கிள்ளான் |
மக்கள் | |
மக்கள்தொகை | இல்லை |
கிள்ளான் தீவு (மலாய்: Pulau Klang; ஆங்கிலம்: Klang Island; சீனம்: 巴生岛) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் மலாக்கா நீரிணை கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு.[1]
சதுப்பு நிலங்களால் (Mangrove Swamps) சூழப்பட்டுள்ள இந்தத் தீவு, 2.70 கி.மீ.² பரப்பளவைக் கொண்டது. இண்டா தீவுக்கு (Indah Island) அடுத்த நிலையில் [[கிள்ளான் மாவட்டம்|கிள்ளான் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவு; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தீவுகளில் மூன்றாவது பெரிய தீவும் ஆகும்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் தென்மேற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ளது.
கிள்ளான் தீவுகள் எட்டு சிறிய சதுப்புநிலத் தீவுகளை உள்ளடக்கியது. அவற்றில் மூன்று தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் சார்ந்தவை. மற்ற ஐந்து சதுப்புநிலத் தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை.[2]