கிழக்கு இமயமலைத் தொடர் (Eastern Himalayas) என்பதன் நிலப்பகுதிகள் நேபாளம், வடகிழக்கு இந்தியா, பூட்டான், திபெத் தன்னாட்சிப் பகுதி முதல் சீனாவில் உள்ள யுன்னான் வடக்கு மியான்மர் வரை பரவி உள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் பருவமழை இப்பகுதிகளின் காலநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சூன் முதல் செப்தம்பர் வரை இம்மாற்றங்கள் வெகுவாக ஏற்படுகின்றன.[1] இந்நிலப்பகுதிகளில் குறிப்பிடத் தக்க வகையில் உயிரியற் பல்வகைமை நிறைந்து காணப்படுகிறது.[2][3] இம்மலைத்தொடரின் தட்பவெப்பநிலை சூழ்நிலை என்பது வெப்ப வலயத்தில் உள்ள மலைச் சூழற்றொகுதிகள் ஆகும். கோடைகாலத்தில் இங்கு நிலவும் சராசரி வெப்பநிலை 20 °C (68 °F) ஆகும். வருடத்தின் சராசரி மழை அளவு 10,000 mm (390 அங்குலம்) ஆகும். அதிக அளவிலான பனிப்பொழிவு அரிதாக ஏற்படுகிறது. மேற்கு இமயமலைத் தொடரினை விட, இங்கு மழைப்பொழிவு அதிகம்.