கிழக்கு விரைவு நெடுஞ்சாலை Eastern Express Highway | |
---|---|
சிவப்பு நிறத்தில் கிழக்கு விரைவு நெடுஞ்சாலை | |
முலுண்டு அருகில் சுங்க சாவடி | |
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு முபெமமேஆ,[1] இதேநெஆ | |
நீளம்: | 23.55 km (14.63 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | தானே |
பாண்டுப்-ஐரோலி மேம்பாலச் சாலை, (பாண்டுப்) ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலை (விக்ரோளி) சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலை (செம்பூர்) | |
தெற்கு முடிவு: | சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | மகாராட்டிரா |
முக்கிய நகரங்கள்: | தானே, மும்பை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
கிழக்கு விரைவு நெடுஞ்சாலை (Eastern Express Highway சுருக்கமாக EEH, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கு மும்பை பகுதியின் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்தையும்[2], தானே மாவட்டத்தின் தானே நகரத்தையும் இணைக்கும் 23.55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட விரைவுச் சாலை ஆகும்.[3] இது மும்பை பெருநகரப் பகுதிகளை இணைப்புதுடன், தில்லி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 48யின் ஒரு அங்கமாகும். இந்த விரைவுச் சாலை இடது புறம் 3 மற்றும் வலது 3 ஆக மொத்தம் 6 வழித்தடங்களும், பல மேம்பாலங்களும் கொண்டது.
இந்த விரைவுச் சாலை, பாண்டுப்பில் பாண்டுப்-ஐரோலி மேம்பாலச் சாலையும், விக்ரோளியில் ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலையையும், சாந்த குருசில் சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலையையும் கடக்கிறது.