கிஸ்போர்னின் சர் கை (Sir Guy of Gisbourne) என்பது ஆங்கில நாட்டுப்புறக் கதைகளில் ஒன்றான இராபின் ஊட் கதைகளில் வரும் ஒரு கதைப் பாத்திரம். இவர் முதலில் "இராபின் ஊட் அண்ட் கை ஆஃப் கிஸ்போர்ன்" ( சைல்ட் பாலாட் 118) என்ற கதையில் தோன்றினார். [1] அதில் இவர் இராபின் ஊட்டைக் கொல்ல முயற்சிக்கும் ஒரு கொலையாளியாக வருகிறார். ஆனால் இராபின் ஊட்டால் கொல்லப்படுகிறார். கதையின் பிந்தைய பதிப்புகளில், மெய்டு மரியனின் காதலுக்காக இவர் இராபின் ஊட்டிற்கு ஒரு போட்டியாளராக வருகிறார்.
சிறுவர் பாடலான "இராபின் ஊட் அண்ட் கை ஆஃப் கிஸ்போர்ன்" என்ற பாடலின் 1650 இன் பதிப்பில் இருந்து இப்பாத்திரம் வருகிறது. ஆனால் இதன் தோற்றம் அதை விட மிகவும் பழமையானது. அது 1475 ஆண்டைய நாடகத்துடன் உள்ள ஒற்றுமையிலிருந்து ஆராயும்போது தெரியவருகிறது. அதன் ஒரு பகுதி கேம்பிரிட்ஜில் உள்ள திரித்துவக் கல்லூரியின் நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. [2]