கீதா சித்தார்த் Gita Siddharth | |
---|---|
பிறப்பு | 7 ஆகத்து 1950 |
இறப்பு | 14 திசம்பர் 2019 |
பணி | நடிகை, சமூக ஆர்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 1972–2019 |
வாழ்க்கைத் துணை | சித்தார்த் கக் |
பிள்ளைகள் | அந்தரா கக் |
கீதா சித்தார்த் (Gita Siddharth) (7 ஆகஸ்ட் 1950 - 14 டிசம்பர் 2019) ஒரு இந்திய நடிகையும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். இவர் முக்கிய பாலிவுட் மற்றும் பரிச்சாய் (1972), கர்ம் ஹவா (1973), மற்றும் கமன் (1978) போன்ற கலைத் திரைப்படங்களில் நடித்தார்.
21வது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் எம். எஸ். சத்யுவின் கர்ம் ஹவா (1973) திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானார். அந்தத் திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. மேலும் கீதாவும் முன்னணி நடிகையாக ஒரு நினைவுப் பரிசைப் பெற்றார்.[1][2]
கீதா, இந்திய ஆவணத் திரைப்படத் தயாரிப்பாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் மற்றும் தொகுப்பாளருமான சித்தார்த் கக் என்பவரை மணந்தார். சித்தார்த் 1990களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட சுரபி என்ற கலாச்சார நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் வழங்குநர் என்று நன்கு அறியப்பட்டவர். இவர்களது மகள் அந்தரா கக்கும் ஒரு ஆவணப்பட தயாரிப்பாளர்.[3] கீதா அந்த நிகழ்ச்சியின் கலை இயக்குனராகவும் இருந்தார்.[4] கீதா 14 டிசம்பர் 2019 அன்று இறந்தார்.