பிறப்பு | இந்தியா | அக்டோபர் 30, 1948
---|---|
பிரதான விருப்பு | பெண்ணியம், இனப்பெருக்க உரிமைகள் |
கீதா சென் (Gita Sen) ஓர் இந்திய பெண்ணிய அறிஞராவார் . இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின், ஈக்விட்டி & சோஷியல் டிடர்மினெண்ட்ஸ் ஆஃப் ஹெல்த் குறித்த இராமலிங்கசுவாமி மையத்தில் ஒரு புகழ்பெற்ற பேராசிரியராகவும் இயக்குநராக உள்ளார். [1] ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகவும், பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் பேராசிரியராகவும், ஒரு புதிய சகாப்தத்திற்கான பெண்களுடன் மேம்பாட்டு மாற்றுகள் என்ற நிறுவனத்தின் பொது ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர், தில்லியின் பொருளாதாரப் பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலையும், இசுட்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம், கரோலின்ஸ்கா மையத்தின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம், சசெக்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
உலக வங்கியின் வெளிப்புற பாலின ஆலோசனைக் குழுவின் முதல் தலைவராக இருந்த இவர், பாலின சமத்துவம் குறித்த மில்லினியம் திட்டத்தின் பணிக்குழுவில் உறுப்பினராக இருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியத்தின் 2003-2007 இந்திய மக்கள்தொகை மதிப்பீட்டின் முதன்மை ஆலோசகராக உட்பட பல திறன்களில் இவர் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் இனப்பெருக்க சுகாதார மற்றும் ஆராய்ச்சித் துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார்.
தற்போது, இவர் ஆர்வர்டு டி.எச். சான் பொது சுகாதாரப் பள்ளியில் [2] உலகளாவிய சுகாதாரம் மற்றும் மக்கள்தொகையின் துணை பேராசிரியராகவும், பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியராகவும் உள்ளார். [3] 2020 ஆம் ஆண்டில் இவருக்கு டான் டேவிட் பரிசு வழங்கப்பட்டது . [4]