கீத் ஜேம்ஸ் லைட்லர் (Keith James Laidler) (ஜனவரி 3, 1916 - ஆகஸ்ட் 26, 2003), இங்கிலாந்தில் பிறந்தவர், வேதி வினைவேகவியலில் முன்னோடியும், நொதிகளின் இயற்பிய வேதியியலில் நிறைய பங்களிப்புகள் செய்தவரும் ஆவார்.
லைட்லர் தனது ஆரம்பக் கல்வியை லிவர்பூல் கல்லூரியில் பெற்றார்.[1] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டத்தையும் (1934) மற்றும் முதுகலைப் பட்டத்தையும்(1938) பெற்றார்.[2][3] சிரில் நார்மன் ஹின்ஷெல்வுட்டின் கீழ் வேதிவினைவேகவியல் துறையில் அவரது முதுகலைப்பட்டத்தை முடித்த இவர் 1940 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை முடித்தார்.[2] ஹென்றி ஐரிங்கின் கீழ் கன்டென்ஸ்டு அண்ட் ஹெட்டோரோஜினியஸ் சிஸ்டங்களில் உள்ள வேதிவினைகளின் இயக்கவியல் என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை முடித்தார்.[3] இவர் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குப் பிறகான ஆராய்ச்சி தொடர்பான கனடிய தேசிய ஆராய்ச்சிக் குழுமத்தின் உறுப்பினராக 1940-1942 முடிய உள்ள காலகட்டத்தில் பணியாற்றினார்.
ஒரு பதின்ம ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் (1946-1955) இவர் தனது கல்வி வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை ஒட்டவா பல்கலைக்கழகத்தில் (1955-1981) கழித்தார். அங்கு இவர் வேதியியல் துறையின் தலைவராகவும், அறிவியல் புலத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[3] இவர் 13 புத்தகங்கள் மற்றும் 250 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர்.[3] இவரது தொடக்க ஆண்டுகளில் இவர் வேதிவினைவேகவியலின் கோட்பாட்டில் சிரில் ஹின்ஷெல்வுட்டுடன் [4] பணியாற்றிய இவர் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப்பணியின் போது ஹென்றி ஐரிங் மற்றும் சாமுவேல் கிளாஸ்டோன் ஆகியோருடன் தனித்த வினைவேகத்தைக் கண்டறியும் முயற்சிக்கு இதை விரிவுபடுத்தினார்.[5] ஒட்டாவாவில் ஒரு தனித்த ஆராய்ச்சியாளராக இவர் கோட்பாட்டியல் [5] மற்றும் பரிசோதனை ஆய்வுகள் இரண்டிலும் நொதியங்களின் வினைவேகவியல் தொடர்பாக அதிக அளவில் பணியாற்றினார்.[6] இவர் பல வேதியியல் புத்தகங்களை எழுதினார், இவற்றில் நொதிகளின் செயல்பாட்டின் வேதிவினைவேகவியல் என்பது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கருத்தியல் பற்றிய தகவல்களின் மிக முக்கியமான ஆதாரமாக இருந்தது. தனது பணி ஓய்வுக்குப் பிறகு, லைட்லர் அறிவியல் வரலாற்றில் அதிகளவில் பணியாற்றினார், மேலும் இயற்பிய வேதியியல் வரலாறு மற்றும் தொழில்நுட்பத்துடனான அதன் உறவு பற்றிய புத்தகங்களை எழுதினார்.
லைட்லர் கனடாவின் வேந்தியக் கழகத்தின் உறுப்பினராக இருந்தார், இவர் "இருபதாம் நூற்றாண்டின் முன்னோடிகளில் ஒருவராக வேதி வினைவேகவியலில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் நவீன இயக்கவியல் கோட்பாட்டை வழங்கும் நிலைமாற்ற நிலைக் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.
லைட்லரின் எண்ணற்ற கௌரவங்களில் ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்கான சிறந்த விருது (1971), வேதிக்கல்விக்கான கனடாவின் வேதியியல் நிறுவனம் யூனியன் கார்பைடு விருது (1974) மற்றும் குயின்ஸ் ஜூபிலி பதக்கம் (1977), நூற்றாண்டு பதக்கம் (1982), மற்றும் ஹென்றி மார்ஷல் டோரி பதக்கம் (1987), கனடாவின் வேந்தியக் கழகம்,[2][3] மற்றும் சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம், பர்னபி, பிரித்தானிய கொலம்பியா, கனடா (1997) மற்றும் லெத்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆல்பர்ட்டா, கனடாவில் இருந்து கௌரவ பட்டங்கள் (1999) இயற்பிய வேதியியல் வரலாற்றில் இவர் செய்த பணிக்காக, அமெரிக்க வேதியியல் சங்கத்தின் வேதியியல் வரலாற்றின் பிரிவு இவருக்கு "வேதியியல் வரலாற்றில் சிறந்த பங்களிப்புகளுக்காக" அதன் டெக்ஸ்டர் விருதை வழங்கியது (1996).[3]
லைட்லர் 1981 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார், ஆனால் பேராசிரியராக தொடர்ந்து விரிவுரையாற்றும் பணியைச் செய்தார். இவர் ஆகஸ்ட் 26, 2003 அன்று இறந்தார் [3] 2004 ஆம் ஆண்டில், வேதியியலுக்கான கனடியன் கழகம் இவரது நினைவாக அவர்களின் நோராண்டா விருதை கீத் லைட்லர் விருது என மறுபெயரிட்டது.[3]