இந்தக் கட்டுரை கீரவாணி இசையை பற்றியது பற்றியது. இசையமைப்பாளர் கீரவாணி பற்றிய கட்டுரைக்கு, கீரவாணி (இசையமைப்பாளர்) என்பதைப் பாருங்கள்.
கீரவாணி (Keeravani) என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.[1][2]
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) , காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.