கீழ்க் காக்ரி அருவி | |
---|---|
![]() | |
![]() | |
அமைவிடம் | லாத்தேஹார் மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா |
ஆள்கூறு | 23°31′54″N 84°14′45″E / 23.53155°N 84.24591°E |
மொத்த உயரம் | 98 மீட்டர்கள் (322 அடி) |
நீர்வழி | காக்ரி ஆறு, அவுரங்கா ஆற்றின் துணையாறு |
கீழ்க் காக்ரி அருவி (Lower Ghaghri Falls) இந்திய மாநிலமான சார்கண்டில் உள்ள லாத்தேஹார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது லாத்தேஹார் மாவட்டத்தில் உள்ள நேதர்ஹாட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் 33வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும்.[1] இதன் மயக்கும் அழகு காரணமாக சார்க்கண்டில் ஓர் முக்கிய சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது.
இந்த நீர்வீழ்ச்சி அவுரங்கா ஆற்றின் துணை ஆறான காக்ரி ஆற்றில் அமைந்துள்ளது. கீழ்க் காக்ரி அருவியினைச் சுற்றி மிகவும் அடர்த்தியான காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகளில் சூரியக் கதிர்கள் கூட துளைப்பது கடினம். இந்த அருவியின் நீர் 320 அடி (98 மீ) உயரத்திலிருந்து விழுகிறது. மேல் கக்ரி அருவி நேதர்ஹட்டிலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தொலைவில் நேதர்ஹாட் அணைக்குக் கீழே சிறிய அருவியாக விழுகிறது.[2]