கீழ்பாடம் குமரன் நாயர்

கீழ்பாடம் குமரன் நாயர் (Keezhpadam Kumaran Nair) (1916-2007) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த கதகளி கலைஞர் ஆவார். [1] கதகளியைத் தவிர பல பாரம்பரிய இந்திய கலை நிகழ்ச்சிகளிலும் இவர் பணிபுரிந்துள்ளார். இவரது மேடை நடிப்பு நான்கு நூற்றாண்டு பழமையான கலை வடிவத்தில் ஒரு புதிய பானிய உருவாக்கியது. மேலும் புராணங்களைப் பற்றிய இவரது பரந்த மற்றும் ஆழமான பார்வைக்கும், புராணங்களைப் படிப்பதன் மூலமும் அறிஞர்களிடம் பேச்சுக்களில் ஈடுபடுவதன் மூலமும் அறிவைத் தொடர்ந்து தேடுவதிலிருந்து தூண்டப்படுகிறது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த பரதநாட்டியம், வடந்தியாவின் கதக், கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒடிசி போன்ற கூட்டுக் கலை வடிவங்களுடன் நேரடியாக உரையாடிய மிகக் குறைவான கதகளி கலைஞர்களில் இவரும் ஒருவர். சென்னையில் தனது இளமை நாட்களில் இவர் தமிழ்த் திரைபடங்களில் இவர் பணியாற்ரினார். [2]

ஆரம்ப ஆண்டுகள்

[தொகு]

பாலக்காடு மாவட்டத்தின் கதகளிக்கென சிறபு வாய்ந்த ஒன்றான வெள்ளிநெழி என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்ட இவர் தனது ஐந்து வயதிலிருந்தே கல்லுவாழி பாணியில், அதன் குரு,பட்டிக்கம்தோடி இராவுன்னி மேனன் என்பவரிடம் பயின்றார். கேரளாவின் கலாமண்டலத்தில் இவரது வகுப்பு தோழராக புகழ்பெற்ற கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் (1914-1990) இருந்தார்.

திரை வாழ்க்கை

[தொகு]

தனது குரு பட்டிக்காம்தோடியிடம் ஏற்பட்ட ஒரு பிணக்கினால் இவர் சென்னை சென்றார். அங்கு இவர் நடிகர் ரஞ்சனுக்கு நடனத்தை (பாடல்களுக்கு) கற்பிப்பதன் மூலம் நடனக் கலைகளில் தேர்ச்சி பெற்றார். இந்த காலகட்டத்தில், இவர் திரைப்பட நடிகர் ம. கோ. இராமச்சந்திரனுடன் நெருக்கமாக பணியாற்றினார். பின்னர் அவர் அரசியலுக்கு மாறினார் மற்றும் மாநில முதல்வராக ஆனார்.

விருதுகள்

[தொகு]

நாயர் விரைவில் ஒரு ஆசிரியராக கலாமண்டலம் திரும்பினார். அங்கு சூழ்நிலைகள் இவரை நடனப் பிரிவில் பணியாற்ற கட்டாயப்படுத்தின. மகிழ்ச்சியற்ற இவர் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் இவர் பி.எஸ்.வி நாட்டியச்சங்கம், கோட்டக்கல் கலசதானம், சுனங்கத் மற்றும் வாரணக்கொட்டு களியோகம், பையனூர் போன்ற பல கதகளி பள்ளிகளில் பணியாற்றினார். ஆனால் அவரது மிக நீண்ட கால வேலைகள் பாலக்காடு மாவட்டத்தில் பெரூரில் உள்ள காந்தி சேவா சதனிலும், புதுதில்லியில் கதகளிக்கான சர்வதேச மையத்திலும் இருந்தது . இவர், பத்மஸ்ரீ விருது (2004), [3] சங்கீத நாடக அகாதமி விருது, கேரள சங்கீத நாடக அகாதமி கூட்டாளார், கலாமண்டலம் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

கடைசி காலம்

[தொகு]

தான் 2007 இல் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் இருந்து ஓய்வு பெற்றா. மேலும் தனது சொந்த ஊரான வெள்ளிநெழியின் வடக்கு மூலையில் உள்ள அவரது வீட்டில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை நடத்தினார். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-27. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-11. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. http://www.newindpress.com/NewsItems.asp?ID=IER20070726042616&Page=R&Title=Kerala&Topic=0