குக்கட்பள்ளி | |
---|---|
அடைபெயர்(கள்): கேபி | |
ஆள்கூறுகள்: 17°29′N 78°25′E / 17.483°N 78.417°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் |
நகரம் | ஐதராபாத்து |
அரசு | |
• வகை | மேயர்-நிர்வாகம் |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத் மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 072,500 085 |
வாகனப் பதிவு | டிஎஸ்-07 |
மக்களவைத் தொகுதி | மல்கஜ்கிரி |
சட்டப் பேரவைத் தொகுதி | குக்கட்பள்ளி |
திட்டமிடல் நிர்வாகம் | ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம் |
நிர்வாகம் | பெருநகர ஐதராபாத் மாநகராட்சி |
குகட்பள்ளி (Kukatpally) என்பது இந்தியாவின் தெலங்ணாவில் ஐதராபாத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின்மல்கஜ்கிரி வருவாய் பிரிவில் உள்ள பாலநகர் மண்டலத்தின் தலைமையகம்ம் ஆகும். [1] பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியில் இணைவதற்கு முன்னர் இது ஒரு நகராட்சியாக இருந்தது. இப்போது இது "பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் வடக்கு மண்டலத்" தலைமையகமாக உள்ளது. [2]
இதன் சாலைகள், ஐதராபாத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆலோசனை நகரத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்திற்கு அருகாமையில் உள்ளது. [3]
குக்கட்பள்ளியின் புவி ஆயத்தொலைவுகள் 17 ° 29′N 78 ° 25′E ஆகும். பேசப்படும் முக்கிய மொழி தெலுங்கு, சிலர் உருது மொழியை பேசுகிறார்கள். இந்தியையும் புரிந்துகொள்கிறார்கள். [4] இது ஐதராபாத்தில் மிகவும் பரபரப்பான வணிக மையங்களில் ஒன்றாகு. இது ஆடை மற்றும் உணவகங்களுக்கு பிரபலமானது. ஐதராபாத்தில் ஒரு கிமீ 2 க்கு 33,076 நபர்களைக் கொண்ட மிகப்பெரிய மக்கள் தொகை அடர்த்தி கொண்டபகுதியாகும். [5]
இது, ஐதராபாத்தின் வடமேற்கு பகுதியில் ஒரு தொழில்துறை பகுதியாக இருந்தது. 1990களின் முற்பகுதியில் இதன் மக்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கியது, பலர் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து இப்பகுதியைச் சுற்றி குடியேறினர்.
பதுகம்மா, உகாதி, வரலட்சுமி நோன்பு, அட்லத்தாடி, விநாயக சதுர்த்தி, சங்கராந்தி, தீபாவளி, போனலு, ரமலான், பக்ரீத், மற்றும் மிலாதுன் நபி போன்ற விழாகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன. விஜயதசமியும் முக்கியமான திருவிழாவில் ஒன்றாகும்.