தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பலப்புவதுகே குசல் கிம்கான் மென்டிஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 2 பெப்ரவரி 1995 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கைத் துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக் காப்பாளர், துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 132) | 22 அக்டோபர் 2015 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 10-14 டிசம்பர் 2015 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013/14–இன்று | புளூம்ஃபீல்டு கிளப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, டிசம்பர் 21 2015 |
பாலபுவதுகே குசல் கிமான் மென்டிசு (Balapuwaduge Kusal Gimhan Mendis,, சிங்களம்: කුසල් මෙන්ඩිස්; பிறப்பு: 2 பெப்ரவரி 1995) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர்.[1] இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிரார்.[2] இலங்கை தேசிய அணிக்குத் தேர்வாவதற்கு முன்பாக 16 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அனைத்து வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் இவர் மூன்றாவது வீரராக களம் இறங்குகிறார். 2016- 2017 ஆம் ஆண்டின் இலங்கைத் துடுப்பாட்ட அவை விருதுவழங்கும் விழாவில் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரராக இவர் அறிவிக்கப்பட்டார்.[3]
மொரட்டுவை பிரின்சு ஒஃப் வேல்சு கல்லூரியில் இவர் கல்வி பயின்றார்.
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 13 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 39 ஓட்டங்களும் எடுத்தார்.[4] பின் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இலங்கைத் துடுப்பாட்ட அணியில் விளையாடும் அணியில் இவர் இடம்பெற்றார். முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஓட்டங்கள் எடுக்கவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் தனது முதல் 50 ஓட்டங்களை எடுத்தார்.
சூன் 16, 2016 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவர் தனது முதலாவது அரைநூறு ஓட்டங்களை அடித்தார்.[5] சூலை 5, 2016 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[6]
சூலை 28,2016 இல் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இதன்மூலம் மிக இளம்வயதில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நூறு அடித்தவர் எனும் சாதனையையும், அதன் சொந்த மண்ணில் அதிக ஓட்டங்கள் அடித்த இலங்கை வீரர் எனும் சாதனையையும் படைத்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற இவர் உதவினார்.[7] ஆத்திரேலிய மண்ணில் இலங்கை அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
பின் 2016-2017 ஆம் ஆண்டில் சிம்பாப்வேயில், மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி, சிம்பாப்வே துடுப்பாட்ட அணி மற்றும் இலங்கைத் துடுப்பாட்ட அணி பங்கேற்ற முத்தரப்பு போட்டிகளில் இவர் விளையாடும் அணியில் இடம்பெற்றார். இந்தத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இவர் 94 ஓட்டங்கள் எடுத்துன் அணியின் மொத்த ஓட்டம் 330 ஆக உதவினார். இந்த ஓட்டங்களே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். இந்தப் போட்டியில் இலங்கை அணி 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[8] இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. இறுதிப்போட்டியில் 50 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் இலங்கை அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் முதல் தொடர்நாயகன் விருது பெற்றார்.[9]