குஞ்ச பிகாரி மெகர் Kunja Bihari Meher | |
---|---|
பிறப்பு | 1928 (அகவை 95–96) பர்கஃட் மாவட்டம், ஒடிசா, இந்தியா |
பணி | நெசவாளர் தலைமை கைவினைஞர் |
அறியப்படுவது | நாத சங்கீர்த்தனம் |
விருதுகள் | பத்மசிறீ கைவினைப் பொருட்களுக்கான தேசிய விருது |
குஞ்ச பிகாரி மெகர் (Kunja Bihari Meher) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைவினைஞர் மற்றும் நெசவாளர் ஆவார்.[1] ஒடிசா மாநிலத்தின் பர்கார் மாவட்டத்தில் இவர் பிறந்தார்.[2] இவர் ஒடிசாவின் சம்பல்புரி புடவைகளில் காணப்படும் இக்காட் என்ற கட்டு-சாயப் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றவர் ஆவார்.[3] இவருடைய இத்தொழில்நுட்பம் சம்பல்புரி கைத்தறி தொழில்துறையின் வளர்ச்சிக்கு பெருமை சேர்த்தது.[4] 1998 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருது குஞ்ச பிகாரி மெகருக்கு வழங்கப்பட்டது.[5] 2009 ஆம் ஆண்டு நெசவு வடிவமைப்புக்கான தேசிய மையத்தின் கைவினைப் பொருட்களுக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.[6] குஞ்ச பிகாரி மெகரின் மகன் சுரேந்திர மெகரும் ஒரு பிரபலமான நெசவாளர் ஆவார். [7]