குஞ்சிகல் அருவி | |
---|---|
அமைவிடம் | நிடகோடு கிராமம், மசுதிகாட்டே அருகில், சிமோகா மாவட்டம், கருநாடகம் |
ஆள்கூறு | 13°41′41″N 75°01′05″E / 13.6947°N 75.01813°E |
வகை | Tiered |
மொத்த உயரம் | 1493 ft (455m)[1] |
வீழ்ச்சி எண்ணிக்கை | 4 |
நீர்வழி | வராகி ஆறு |
குஞ்சிகல் அருவி (Kunchikal Falls) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவின் சிமோகா மாவட்டத்தில் மஸ்திகட்டே அருகே நிடகோடு கிராமத்தில் அமைந்துள்ளது.[2][3] உலக அருவிகளின் தரவுத்தளத்தின்படி குஞ்சிகல் நீர்வீழ்ச்சி பாறைக் கற்களால் கீழே விழுகிறது. இதன் வீழ்ச்சியின் மொத்த உயரம் 455 மீட்டர் (1493 அடி) ஆகும்.[1]
இந்த அருவி வராகி ஆற்றின் மூலம் உருவாகிறது. சிவமோகா மாவட்டம் மஸ்திகட்டே அருகே [4] மணி அணையும், [5] நிலத்தடி மின் உற்பத்தி நிலையமும் கட்டப்பட்ட பின்னர், இந்த அருவிக்கான நீர் ஆதரம் வெகுவாகக் குறைந்து விட்டது. மழைக்காலங்களில் (சூலை-செப்டம்பர்) மட்டுமே இங்கு நீர் காணப்படும். அருவி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் இருப்பதால், இதனை பார்வையிட அனுமதி பெறவேண்டியது அவசியமாகும். கொசங்கடி கிராமத்தில் (சுமார் 15 கி.மீ தூரத்தில்) அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. குஞ்சிகல் அருவியிலிருந்து 138 கி.மீ (86 மைல்) தொலைவில் மங்களூர் விமான நிலையம் உள்ளது. [6]