குஞ்சுண்ணல் (Paedophagy)(பேடோபாஜி) என்பது மீன்கள் அல்லது பிற விலங்குகளின் உணவு நடத்தை ஆகும். இந்த வகை உணவு நடத்தையில், இவ்விலங்குகள் தமது உணவின் ஒரு பகுதி அல்லது முதன்மையாக மற்ற விலங்குகளின் முட்டைகள் அல்லது இளம் உயிரிகளை உண்ணுகின்றன. இருப்பினும், பேடோபாஜி நடத்தையினை முதலில் விவரித்த பி. எச். கிரீன்வுட், இது சிக்லிட் மீன்களிடையே காணப்படும் உணவூட்டும் நடத்தை என்று வரையறுக்கிறார்.[1][2][3]
மொத்தத்தில் 200 முதல் 300 சிற்றினங்களைக் கொண்ட ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரியா ஏரியில் காணப்படும் மீன்களில் குஞ்சுண்ணல் காணப்படுகிறது.[4] ஆனால் பேடோபாஜிகளைப் பொறுத்தவரை இது 8 இனங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.[1] ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி ஏரியில் மொத்தம் 500-1000 சிற்றினங்கள் உள்ளன.[4] இவற்றில் பல சிற்றினங்கள் பேடோபாஜி சிற்றினங்களாக உள்ளன. பேடோபாஜிக்களைக் கொண்ட மற்ற ஏரிகளில் ஆப்பிரிக்காவில் உள்ள எட்வர்ட் ஏரி மற்றும் ஜோர்ஜ் ஏரி ஆகியவையும் அடங்கும்.[1] மலாவி ஏரியிலிருந்து பல்வேறு வகையான சிக்லிட் மீன்கள் பேடோபாஜி பண்பை வெளிப்படுத்துகின்றன. இவற்றில் கேப்ரிக்ரோமிசு, கெமிடேனியோக்ரோமிசு மற்றும் நெவோக்ரோமிசு வகையைச் சேர்ந்த மீன்களும் அடங்கும். தங்கனீக்கா ஏரியில் கேப்லோடாக்சோடான் மற்றும் கிரீன்வுடோக்ரோமிசு பெல்க்ரோசி பேரினத்தைச் சேர்ந்த சிற்றினங்களும் இந்த வகையான உணவு உத்தியை மேற்கொள்கின்றன.[5]
வாயில் அடைகாத்தல் என்பது ஆப்பிரிக்க சிக்லிட்களில் பெற்றோர் பராமரிப்பின் மிகவும் பொதுவான முறையாகும்.[2] மேலும் இத்தகைய பெற்றோர் பேணல் பண்பு முன்னோர்களின் பராமரிப்பு முறையிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.[6] சிக்லிட் மீன்களில் தங்கள் குஞ்சுகளை தமது வாய் குழியில் அடைகாத்தல் நன்கு அறியப்பட்டிருப்பதால், தாயின் வாயிலிருந்து நேரடியாக குஞ்சுகளை உண்பது பேடோபாஜி அணுகுமுறைகளில் முக்கியமானதாகும். குஞ்சு பொரித்தவுடன், குஞ்சுகள் நன்கு உருவாகும் வரை மீன்களின் வாயினுள் வளர்ச்சி நடைபெறுகிறது. பொதுவாகப் பெற்றோரின் பாதுகாப்பில் ஒரு நிலை பின்பற்றப்படுகிறது.[2] குட்டிகள் தாயின் வாயில் நீண்ட காலம் தங்கவைக்கப்படுவதால், பெண் சிக்லிட் வாயில் குட்டிகளை அடைக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அது குஞ்சுண்ணும் உயிரிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது.
குஞ்சுண்ணுபவை, முட்டை அல்லது குஞ்சுகளை வேடையாடுவதற்கு மூன்று முக்கிய முறைகள் அல்லது நடத்தைகளைப் பின்பற்றுகின்றன. முதல் முறையில் தானாகக் குட்டியை வெளியேற்றுவது, இரண்டாவதாக மூக்கை விழுங்குவது. இது அடைகாக்கும் பெண்ணின் குட்டியை வாயிலிருந்து வெளியேற்றும்படி கட்டாயப்படுத்துகிறது.[1] பிற நடத்தைகளில் சிச்லிடே குடும்பத்தைச் சேர்ந்த பிளெகோடசு இசுட்ராலெனி சிற்றினங்கள் அடங்கும்.[1] இந்த பேரினம் குஞ்சுண்ணும் பண்பினை வெளிப்படுத்தும் போது, பல சிக்லிட் மீன்களின் முட்டையிடும் இடமாக இருக்கும் பகுதிக்கு வெளியே வட்டமிடுவதையும் காத்திருப்பதையும் அவதானிக்க முடியும். வாயிலிருந்து குஞ்சுகள் வெளியேறும் வரை வரை காத்திருக்கிறது.[1] இருப்பினும், வாய் அடைகாக்கும் நிலையிலிருந்து திருடுவது மட்டுமே கவனிக்கப்பட்ட தந்திரம் அல்ல, பெற்றோரின் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளக்கூடியது.[2]
பெற்றோரால் பாதுகாக்கப்படும் குஞ்சுகளை பேடோபேஜி உயிரினங்கள் அணுகுவதை உள்ளடக்கியது. சந்ததியினரைப் பாதுகாக்கப் பெற்றோர்கள் வேட்டையாடும் விலங்குகளைத் துரத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன. குஞ்சுகளைப் பாதுகாக்கப் பெற்றோரின் இந்த திடீர் இயக்கம் காரணமாகக் குஞ்சுகள் துன்புறுகின்றன. தாய் வெற்றிகரமாகத் திரும்பி வரும் வரை சந்ததியினர் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுசேர்ந்து காணப்படும். பின்னர் தாய் விலங்கு, தன் பாதுகாப்புப் பணியினைத் தொடரும்.[2] குஞ்சுகள் மீண்டும் தாயின் வாயில் நுழைய முயற்சிக்கும் நிகழ்வுகளும் சில சந்தர்ப்பங்களில் நடைபெறும். ஆனால் அச்சுறுத்தல் இல்லாததால் வாயினுள் நுழைவது நிராகரிக்கப்படும். தாய் பாதுகாப்பு அச்சுறுத்தலை உணரும்போது குஞ்சுகளை அழைத்து வாயினுள் பாதுகாக்கின்றது.[2]
வாயில் அடைகாக்கும் மீன்களிடமிருந்து குஞ்சுகளைக் கவரும் போது அடைவிலங்குகளுக்குக் கடுமையான தீங்கு விளைவிக்காமல், குஞ்சுண்ணிகள் தடித்த வாய்வழி சளி சவ்வினால் மூடப்பட்டிருக்கும், நீட்டிய மற்றும் விரிவடையக்கூடிய விசாலமான வாய் மற்றும் ஆழமாக உட்பொதிக்கப்பட்ட பற்களைக் கொண்டுள்ளன.[2] பெரிய வாயினைக்கொண்ட குஞ்சுண்ணிகள், வாயில் அடைகாக்கும் உயிரிகளிடமிருந்து குஞ்சுகளை வெளியேற்றத் தகவமைப்பினைப் பெற்றுள்ளன. அதே சமயம் பற்களின் தழுவல் பெற்றோருடன் அதிகமாக இணைக்கப்படுவதைத் தவிர்க்க அனுமதிக்கிறது, இதனால் குஞ்சுண்ணிகளால் குஞ்சுகளின் இழப்பைத் தடுக்கிறது.[2]
அடைகாக்கும் பெற்றோரிடமிருந்து அடையினை அடைவதற்கு குஞ்சுண்ணும் விலங்குகளுக்கு பெரும் சவாலாகவும் அதிக ஆற்றலையும் வளங்களையும் எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், இவை பெறும் முட்டைகள் அதிக சத்தானவை. பிற மீன் முட்டைகளின் அளவை ஒப்பிடும் போது இவை சராசரியாக 3.4 மி.மீ. விட்டம் கொண்டவை.[7]