குடியரசுத் தலைவர் இல்லம் இந்திய உயர்கல்வி நிறுவனம் | |
---|---|
![]() | |
![]() | |
முந்திய பெயர்கள் | Viceregal Lodge |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | ஜேக்கபெதன் |
இடம் | சிம்லா, இமாச்சலப் பிரதேசம் |
நகரம் | நகரம் |
நாடு | இந்தியா |
தற்போதைய குடியிருப்பாளர் | இந்திய உயர்கல்வி நிறுவனம் |
அடிக்கல் நாட்டுதல் | 1880 |
நிறைவுற்றது | 1888 |
உரிமையாளர் | இந்திய கல்வி அமைச்சகம் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | ஹென்றி இர்வின் |
இந்தியக் குடியரசுத் தலைவர் இல்லம் (Rashtrapati Niwas), இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான சிம்லாவில் உள்ளது. இது பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநரின் கோடைக்கால இல்லம் மற்றும் அலுவலகமாக இயங்கியது. இக்கட்டிடத்தை இந்திய வைஸ்ராய் டப்ளின் பிரபு ஆட்சிக் காலத்தில் ஜேக்கபெதன் பாணியில், பிரித்தானிய கட்டிடக் கலைஞர் ஹென்றி இர்வின் 1880ஆம் ஆண்டில் துவக்கி, 23 சூலை 1888 அன்று கட்டி முடித்தார்.[1] தற்போது இவ்வளாகத்தில் இந்திய உயர்கல்வி நிறுவனம் செயல்படுகிறது
331 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் இக்கட்டிடத்தை கட்டி முடிக்க ரூபாய் 38 இலட்சம் செலவானது. தற்போது இக்கட்டிடம் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநர் ஆர்ச்சிபால்ட் வேவல் மற்றும் இந்தியத் தலைவர்கள் இவ்விடத்தில் கூடி இந்தியாவுக்கு தன்னாட்சி உரிமை தருவது குறித்து மாநாடு நடத்தினர்.[2]
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தியக் குடியரசுத் தலைவரின் கோடைக்கால இல்லமாக இருந்த இவ்வளாகம், காலப்போக்கில் மத்தியப் பொதுப் பணித்துறை, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம், இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அன்றைய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் 20 அக்டோபர் 1965 அன்று இவ்வளாகத்தில் இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இந்திய உயர்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது.[3]தற்போது குடியரசுத் தலைவரின் கோடைக்கால இல்லம், சிம்லா மாவட்டத்தில் உள்ள மஷோப்ரா பகுதியில் அமைந்துள்ளது.