குட்டா

குட்டா
குட்டா பள்ளி
குட்டா பள்ளி
ஆள்கூறுகள்: 11°58′06″N 76°03′08″E / 11.96830°N 76.05217°E / 11.96830; 76.05217
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்குடகு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
571250

குட்டா (Kutta) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கோனிகொப்பாலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும்.

அமைவிடம்

[தொகு]

குட்டா கேரள எல்லைக்கு அருகிலுள்ள மடிக்கேரி - மானந்தவாடி சாலையில் அமைந்துள்ளது.

தேசியப் பூங்காக்கள்

[தொகு]

குட்டா என்பது நாகர்ஹோல் தேசியப் பூங்காவின் நுழைவாயிலாகும். தொல்பேட்டி வனவிலங்கு சரணாலயமும் அருகிலேயே உள்ளது.

அஞ்சல் அலுவலகம்

[தொகு]

குட்டாவுக்கு ஒரு அலுவலம் அலுவலகம் உள்ளது. அஞ்சல் குறியீட்டு எண் 571250.[1]

சுற்றுலாத் தலங்கள்

[தொகு]
குட்டாவுக்கு அருகிலுள்ள டாடா நிறுவனத்தின் தேயிலைத் தோட்டம்
ஊருக்கு அருகில் தண்ணீர் விளையாட்டு

குத்தாவிற்கு காவிரி ஆற்றைத் தவிர வேறு எந்த சுற்றுலா அம்சமும் இல்லை. ஆனால் இது குடகு மாவட்டத்தின் பல பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு மிக அருகில் உள்ளது.[சான்று தேவை] [ மேற்கோள் தேவை ] குட்டா அருகே ஒரு மலைப்பாங்கான பட்சி பாதாளம் என்ற இரு இடம் திருநெல்லி கோயிலிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு மலையேறலாம் . மலையடிவாரத்தில் பல பறவை இனங்கள் கொண்ட ஒரு குகை உள்ளது. குட்டா அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றது. எனவே இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. காட்டில் உள்ள இருப்பு அருவி குட்டாவிலிருந்து சிறுது தூரத்தில் அமைந்துள்ளாது. குட்டாவிலிருந்து சாலை கபினி உப்பங்கழிகள் மற்றும் எச்டி கோட் வரை செல்கிறது.

போக்குவரத்து

[தொகு]

குட்டா பேருந்து நிலையம் கர்நாடக பேருந்துகள் மற்றும் கேரள பேருந்துகள் இரண்டிற்கும் ஒரு முனையமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pin Code: 571250, List of Post Offices, KODAGU, KARNATAKA Pincode.net.in". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.