குட்டி ஊசித்தட்டான் (Agriocnemis pygmaea[3] (pygmy wisp) என்பது கோனகிரியினீடியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஊசித்தட்டான் ஆகும்.[4] இது ஆசியாவில் பரவலாகவும் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியிலும் காணப்படுகிறது.
இது சதுப்பு நிலங்களிலும், குளங்களிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த இனம் இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் மனிதன் வாழ்விடங்களிலும் காணப்படும்.[5][6][7][8]
ஊசித் தட்டான்கள் பச்சையும் கறுப்பும் கலந்த உடலைக் கொண்டது. அதன் உடல் கண்டங்களின் கடைசிப் பகுதி செங்கல் நிறத்தில் காணப்படும். பெண் ஊசித்தட்டான்களின் உடல் சிவப்புத் தோற்றத்திலும்கூட இருக்கும். 16-18 மி.மீ. (2 செ.மீ.க்குள்) நீளம் கொண்டது.[9]
↑C FC Lt. Fraser (1933). The Fauna of British India, including Ceylon and Burma, Odonata Vol. I. Red Lion Court, Fleet Street, London: Taylor and Francis.