தோகோகன் கான் 托歡汗 ᠲᠣᠭᠣᠭᠠᠨ ᠬᠠᠭᠠᠨ | |
---|---|
மங்கோலியர்களின் ககான் | |
வடக்கு யுவான் அரசமரபின் ககான் | |
ஆட்சிக்காலம் | 1399–1402 |
முடிசூட்டுதல் | 1400 |
முன்னையவர் | எல்பெக் நிகுலேசுக்சி கான் |
பின்னையவர் | ஒருக் தெமூர் கான் |
பிறப்பு | 1377[1] |
இறப்பு | 1402 (அகவை 24–25) |
குழந்தைகளின் பெயர்கள் | தோகோகன் கான்[2] |
மரபு | போர்சிசின் |
அரசமரபு | வடக்கு யுவான் அரசமரபு |
தந்தை | எல்பெக் நிகுலேசுக்சி கான் |
குண் தெமூர் (மொங்கோலியம்: Гүнтөмөр; மொங்கோலிய எழுத்துமுறை: ᠭᠦᠩ ᠲᠡᠮᠦᠷ; மரபுவழிச் சீனம்: 坤帖木兒) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1400 - 1402இல் ஆட்சிபுரிந்தார். எர்தெனீன் தோப்சி நூலின்படி, குண் தெமூர் எல்பெக் நிகுலேசுக்சி கானின் மூத்த மகன் ஆவார். ஆனால், சசரத் உல் அத்ரக் மற்றும் அபீப் அல் சியார் போன்ற நூல்களின் பதிவுப்படி இவர் செங்கிஸ்கானின் பிற வழித்தோன்றல் என்று குறிப்பிடப்படுகிறது. இவர் ஒருவேளை அரிக் போகேயின்[3] வழித்தோன்றலாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவரது பெயரான குண் தெமூருக்கு மொங்கோலிய மொழியில் "(சிந்தனை இன்பத்தில் ) ஆழ்ந்த நாட்டமுடைய இரும்பு" என்று பொருள்.
அமியில் இருந்த காரா தெல் அரசின் மீது தனது அதிகாரத்தை நிலை நிறுத்தும் ஒரு முயற்சியாக மிங் அரசமரபுடன் இணைந்த என்கே தெமூரை குண் தெமூர் கொன்றார்.[4]
1402இல் குண் தெமூர் குலிச்சியால் தோற்கடிக்கப்பட்டார். குலிச்சி ஒருவேளை அருக்தையுடன் கூட்டணியில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் விளைவாகக் குலிச்சி குண் தெமூரைக் கொன்றார். இவரது இறப்பிற்குப் பல மாதங்கள் கழித்து வடக்கு யுவான் அரசமரபின் அரியணைக்கு இவரது தம்பி ஒல்ஜெயி தெமூர் கான் புண்ணியசிறீ பதவிக்கு வந்தார்.