குண்டசாலை

7°16′0″N 80°40′59″E / 7.26667°N 80.68306°E / 7.26667; 80.68306

குண்டசாலை

குண்டசாலை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°16′00″N 80°41′00″E / 7.2666667°N 80.6833333°E / 7.2666667; 80.6833333
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 464.82 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
106473

குண்டசாலை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.குண்டசாலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் கண்டி - திகனை பெருந்தெருவில் அமைந்துள்ளது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையின் கரயில் கண்டி நகருக்கு சற்று வெளியே அமைந்துள்ள குண்டசாலை பிரதான மக்கள் குடியிருப்புப் பகுதியாகும்.

புவியியலும் காலநிலையும்

[தொகு]

குண்டசாலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 464.82 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

[தொகு]

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 106473 88140 6766 5321 5701 168 377
கிராமம் 105626 87868 6483 5044 5686 168 292
தோட்டப்புறம் 847 272 283 277 15 0 0

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 106473 87144 10261 6130 1842 1060 36
கிராமம் 105626 86873 9717 6115 1825 1060 36
தோட்டப்புறம் 847 271 544 15 17 0 0

கைத்தொழில்

[தொகு]

இங்கு நெற்பயிர்ச் செய்கை சிறிய அளவில் நடைபெற்றாலும் இப்பிரதேசத்தில் தீப்பெட்டி, ஊதுவர்த்தி உற்பத்தி பொன்ன்ற கைத்தொழில்கள் பிரசித்தமாக உள்ளன. தென்னை தோட்டங்களும் காணப்படுகின்றன.

பிரசித்தமானவர்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]


உசாத்துணைகள்

[தொகு]


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை