குந்துநாதர் | |
---|---|
![]() 15ம் நூற்றாண்டின் குந்துநாதரின் சிற்பம், தேசிய அருங்காட்சியகம், புது டில்லி | |
அதிபதி | 17வது தீர்த்தங்கரர் |
குந்துநாதர் (Kunthunath) சமண சமயத்தின் 17வது தீர்த்தங்கரர் ஆவார்.[1][2][3] கருமத் தளைகளிலிருந்து விடுபட்ட குந்துநாதர் சித்த புருசராக விளங்கியவர்.
குந்துநாதர், இச்வாகு குல மன்னர் சூரியதேவருக்கும் - இராணி ஸ்ரீதேவிக்கும், அஸ்தினாபுரத்தில் பிறந்தவர்.[2][4][3]
குந்து என்பதற்கு வட மொழியில் நவரத்தினங்களின் குவியல் எனப் பொருளாகும்.[4] 100,000 ஆண்டுகள் வாழ்ந்த குந்துநாதர் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[4]
தங்க நிறம் கொண்ட குந்துநாதரின் வாகனம் ஆடு ஆகும்.[5]